செவ்வாய், 7 ஜூலை, 2020

உத்தர பிரதேச பார்ப்பன ரவுடி: விகாஸ் துபே. ஏராளமான கொலைகளை ....


       
Rebel Ravi  : உ.பியைக் கலக்கும் பிராஹ்மண ரவுடி: விகாஸ் துபே.! விகாஸ்  துபே.47 வயது நிரம்பிய துபே, உத்தரப் பிரதேசத்தைச் சார்ந்த பிகாரு கிராமத்தைச் சார்ந்த ஒரு பிராஹ்மணர். சிறு வயதிலேயே அடிதடியில் ஈடுபட்டு..தனக்கென ஒரு ரவுடி கும்பலை ஏற்படுத்திக் கொண்டார்.
நில அபகரிப்பு, கொலை,வழிப்பறி எனப் பல குற்றங்களையும் இருபது வயதிற்குள் செய்தார்.
கொள்ளை அடித்த பணத்தை ஏழைகளுக்குத் தந்து, ஒரு ராபின்ஹூட் போன்ற பிம்பத்தை உருவாக்கிக் கொண்டார்.
உ.பியில் அத்தனை போலீஸ் நிலையங்களிலும் இவரது ஆள்கள் நிரம்பி இருப்பதால்..இவரை யாராலும் அசைக்க முடிவதில்லை.
பண்டிட்ஜீ என்று மரியாதை கலந்த பயத்தோடு அழைக்கப்படும் துபேவுக்கு எதிராக எவரும் சாட்சி சொல்ல வருவதில்லை.
இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள்கடத்தல், நில அபகரிப்பு உள்பட 60 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
1990ல் இவர் மீது முதல் கொலைக்குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அப்போது துபேவின் வயது 17.

கான்பூர் பகுதியைக் கலங்க வைத்த ரவுடி ஆனார்.
பாரதீய ஜனதா கட்சியின் ஹரிகிஷன் ஸ்ரீவாஸ்தவாவின் அல்லக்கை ஆகி, அவருக்காக தொகுதி மக்களை பயமுறுத்தி,
வேலை பார்த்து வந்தார்.
ஹரிகிஷன், பகுஜன் சமாஜ் கட்சிக்குத் தாவிய போது..இவரும் கூடவே சென்றார்.
அவருக்காக,சந்தோஷ் ஷுக்ல என்கிற, பாரதீய ஜனதாக் கட்சியின் உ.பி.மாநில அமைச்சரை, ஷிவ்லி என்கிற போலீஸ் ஸ்டேஷனில் பல போலீஸ்காரர்கள் முன்னிலையில் சுட்டுக் கொன்றார்.
போலீஸ் கண்ணெதிரே நடந்த இந்தக் கொலையில் இருந்தும் நிரபராதியாக வெளியே வந்தார்.
பின்னர் சித்தேஷ்வர் பாண்டே என்பவரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
ராம்பாபு யாதவ் என்பவரைக் கொல்ல முயன்று தோற்றார்.
2004 ல் தினேஷ் துபே என்கிற தொழிலதிபரைச் சுட்டுக் கொன்றார்.
பின்னர் அவரது உறவினர் சுட்டுக் கொன்ற வழக்கில் கைதாகி கடந்த பிப்ரவரியில் ஜாமீனில் வெளிவந்தார்.
எப்போதும் 20-25 இளைஞர்கள் சூழ வலம் வருவாராம்.
தனது பகுதியில் யார் வீட்டில் எந்த நல்லது கெட்டது நடந்தாலும் பணத்தைத் தண்ணீர் போலச் செலவு செய்வாராம்.
இவரது ஆதரவு இல்லாமல் எந்தக் கட்சியும் கான்பூரில் ஜெயிக்க முடியாது என்கிறார்கள்.
மேல் சாதி ஓட்டுக்களைத் தன் கன்றோலில் வைத்திருக்கும் துபே, மற்ற சாதியினரையும் பகைத்துக் கொள்வதில்லை.
அவரது கிராமத்தில் இருக்கும் எவரும் துபே ஒரு குற்றவாளி என்பதை ஒப்புக்கொள்வதே இல்லை..
இவ்வாண்டு ஜூலை மூன்றாம் தேதி இவரைக் கைது செய்ய போலீஸ் வந்த போது 8 போலீஸாரைச் சுட்டுக் கொன்று, தப்பினார்.
போலீஸ் வருவது பற்றி இவருக்கு முன்னரே தகவல் வரவே 60 பேர் கொண்ட குழுவோடு காத்திருந்தார். 30 பேர் கொண்ட போலீஸை மறைந்திருந்து கொரில்லா முறையில் தாக்கியது துபேவின் கூட்டம்.டி எஸ் பி..கொடூரமாகக் கொல்லப்பட்டார். 8 போலீஸ் காரர்கள் உடல்களையும் துப்பாக்கி குண்டுகள் சல்லடையாகத் துளைத்தன.
7 காவலர்கள் படுகாயம் அடைந்தனர்.
ஏகே 47, INSAS ரைஃபில் போன்ற அதி நவீன ஆயுதங்களை அந்தக் கூட்டம் பயன்படுத்தியது.
ஒரு கீறல் கூட இல்லாமல், தப்பி விட்டார் துபே.
ரெபெல்ரவி
06/07/2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக