சனி, 4 ஜூலை, 2020

சாத்தான் குளம் காவல் நிலையத்தில் நடந்த பார்ப்பனீய கழுவேற்றம்

Anthony Fernando : வெளிப்படையாகவே பேசுகிறேன்
சாத்தான்குளம் அப்பாவி தந்தை மகன் படுகொலை , இதை திமுக மட்டும் இதைக் கண்டும் காணாதிருந்து, சாதிக்கு அப்பாற்பட்டு இயங்கும் திராவிட சுயமரியாதை போராளிகள், ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், பார்ப்பனிய இந்துத்துவ எதிர்ப்பாளர்கள், இசுலாமியச் சகோதரர்கள் போன்றவர்கள் இதற்கு இரவு பகல் பாராமல் தங்களை வருத்திக் கொண்டு குரல் எழுப்பாமல் இருந்திருந்தால் தந்தை மகன் படுகொலை இன்னொரு லாக் அப் மரணம் என்றளவில் முடிந்து இருக்கும் ...
உடனே திமுக வாக்கு அரசியலுக்காக நடத்திய நாடகம் என்று கொந்தளிக்கலாம்... சரி திமுக வாக்கரசியலுக்காக செய்தது ... சிறுத்தைகள் அமைப்பின் திருமா எதற்காக குரல் கொடுக்க வேண்டும். அவரும் வாக்கு அரசியலுக்காகவா குரல் கொடுத்தார்...
ஆண்டப்பரம்பரை மோகத்தில் திரௌபதி படம் வெளி வந்த போது நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பகுதியினர் சம்பந்தமே இல்லாம விசிலடித்து மகிழ்ந்தனர்.
எனக்குத் தெரிந்து நாடார் சமூகம் பெண்களை முன்னிறுத்தி அரசியல் செய்து முன்னேறிய சமூகமில்லை. அவர்கள் பெரும்பாலும் உழைப்பை மூலதனமாக கொண்டு முன்னேறியவர்கள்....

ஆனால் தந்தை மகன் படுகொலைகளை பெரும்பாலான ஆண்டப் பரம்பரை பெருமை பேசுகிற பயலுக பெரும்பாலும் சத்தமின்றி அதை அமைதியாக ரசித்தானுங்க. சின்ன மாங்காய் ஒரு படி மேலே போய் கொடூரமான ஒரு இரட்டைப் படுகொலைகளை மர்ம மரணம் என்று tweet போட்டதே பெரிய புரட்சி. பார்ப்பன சங்கிகளோ அப்படுகொலைகளை ஒரு சின்ன பிரச்சனை என்று நமுட்டுச் சிரிப்பு சிரித்தனர்.
நாடார்கள் தங்களது எதிரி யார் நண்பர்கள் யார் என்பதை உணர வேண்டிய தருணம் இது...
தமிழ் தேசியம் என்ற பெயரில் எம்பாட்டன் பெரியாரை இழிவுபடுத்துவதும் ஆண்டப் பரம்பரை என்ற பெயரில் தங்களுக்குச் சம்பந்தமே இல்லாத ஆணவப் படுகொலைகளை விசிலடித்து ரசிப்பதும், தங்களது தொப்புள்கொடி உறவுகளான இசுலாமியர்களை துலுக்கத் தீவிரவாதிக என்று ஊளையிடுவதும் என திரிந்தால் கடைசியில் கோவணம் தான் மிஞ்சும்...

நாடார் சமூகத்தின் அடிப்படை வரலாறே சாதீய கொடுமைகளுக்கு எதிராகவும், சமூக நீதிக்காகவும் கொதித்தெழுந்த ஒன்று. சமூக நீதிக்கான போரில் பல போர் மறவர்களை தந்தச் சமூகம் அது.
அந்தப் பழைய வரலாற்றை நினைவில் கொள்வது மிக அவசியமான ஒன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக