புதன், 3 ஜூன், 2020

தஞ்சாவூர் .. மே.வங்க பெண்ணை வீட்டில் அடைத்து பாலியில் விடுதி நடத்திய தம்பதிகள்


tamil.oneindia.com :
செங்கிப்பட்டி அருகே பூதலூர் பிரிவு சாலை அருகே ஓடும் காரில் இருந்தே பெண்ணை வீசி விட்டு சென்றனர்" என்று தெரியவந்துள்ளது
வயிற்றை பிடித்து கொண்டே அழுதவாறே இந்த தகவல்களை பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், அந்த பெண்ணை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்று மாதர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என்றும் அந்த பெண் தங்கி இருந்த வீட்டின் ஓனர் யார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் மாதர் சங்கத்தினர் வலுவான வேண்டுகோளை வைத்து வருகின்றனர்
 அப்போதுதான் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாயின.. சம்பந்தப்பட்ட பெண் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்.. பெங்களூருவில் குடும்பத்தினருடன் தங்கி இருந்துள்ளார்... அப்போது அங்கிருந்து அவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள ஒரு வீட்டிற்கு, வீட்டு வேலைக்காக ஒருவர் அழைத்து சென்றிருக்கிறார்.. 5 மாதமாக அந்த வீட்டில்தான் பெண் வேலை பார்த்து வந்துள்ளா

ஆனால், அந்த வீட்டு உரிமையாளரும், அவரது மனைவியும் பெண்ணை ஏராளமான வழிகளில் துன்புறுத்தியும், கொடுமைப்படுத்தியும் வந்துள்ளனர்.. பாலியல் தொந்தரவும் தந்துள்ளனர்.. நேற்று அவர்கள்தான் ஒரு காரில் 4 பேர் அந்த பெண்ணை ஏற்றி கொண்டு, வழியெல்லாம் அடித்து உதைத்தபடியே வந்துள்ளனர்..

சிடிவி அந்த வீட்டில் இருந்த அத்தனை பேருமே அடித்து கட்டாயப்படுத்திதான் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள் என்று செங்கிப்பட்டி போலீசாரிடம் புகாரும் அளித்துள்ளனர். இதையடுத்து, அந்த புகாரின்பேரில் விசாரணை நடந்து வருகிறது.. அதேபோல, ரத்த காயங்களுடன் காரில் இருந்து இளம்பெண் தூக்கி வீசப்பட்டதும் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியும் உள்ளது. மேலும் பகல் நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் விரைவில் குற்றவாளிகளை பிடித்துவிடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர் போலீசார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக