செவ்வாய், 2 ஜூன், 2020

கலைஞர் தொடக்கிய திட்டங்களால்தான் இன்றுவரை தமிழகம் தப்பி பிழைக்கிறது

Devi Somasundaram : என்னப்பா பிரச்சனை,
இது செய்தா எல்லார்க்கும் கிடைக்குமா,
சரி விடு எல்லார்க்கும் செய்துடலாம் .
இது ஒரு மந்திரம் .. கலைஞரின் மந்திரம்..
என்ன பிரச்சனை என்று அறிந்து அதற்கான தீர்வு அனைவருக்குமானதாக இருக்கனும் என்பதில் தெளிவு செய்து ...அந்த எல்லாருக்கும் என்பதில் எத்தனை அர்த்தம் இருக்கு ..
யாருக்கு, என்ன சாதி, நம்ம ஆளா, என்று பார்த்து செய்வதில்லை...வானத்திற்கு கீழ அத்தனை பேரும் மக்கள் என்ற அடிப்படை ..
கலைஞர் ஒரு சித்தாந்தம் .. ஒன்றை உருவாக்க இன்னொன்றை அழிப்பது தான் உலக இயல்பு, மண்ணை அழித்து தான் கல், காட்டை அழித்து தான் வயல், .
கலைஞர் அழிக்காமலே உருவாக்கியவர்...விவேகானந்தரை அழிக்காமல் அதை விட பெரிய வள்ளுவர் சிலை வைத்து விவேகானந்தர் பாறையை வள்ளுவர் பாறை ஆக்கியவர்.
சீதையை சிலையை அழிக்காமல் கண்ணகிக்கு சிலை வைத்து சீதா தேவி கோட்டங்களை கண்ணகி கோட்டம் ஆக்கியவர்.
பாப்ப்பனரை அழிப்பது நோக்கமல்ல , தமிழை,தமிழரை வளர்ப்பதே நோக்கமாய் செயல்பட்ட தலைவன் .

ஒரு நாட்டை வளர்க்க அந்த நாட்டின் அடிப்படை வாழ்வியல் புரியனும்..அல்லது அதை புரிந்தவர்களை அருகில் வைத்துக் கொள்ளனும் ..அப்ப தான் திட்டங்கள் போடும் போது அது அடிப்படை வாழ்வாதாரத்தை பாதிக்காமல் செயல்படுத்த முடியும்..
வீராணம் குடினீர் திட்டம் ஆரம்பித்த போது அது முதலில் ஷார்ட் ரூட் என்று வயல் வெளிகள் வழியா குழாய் பதிக்க வரைவு திட்டம் தரப்பட்டது ..
வயல்கள் மக்களின் வாழ்வாதாரம் ,அதை அழிச்சி யாருக்கு தண்ணீர் தரப் போறோம்.. அதை மாத்துங்கன்னு கலைஞர் சொல்ல .பின்னர் சாலை வழியா மாற்றப்பட்டது ..( மக்களுக்கு தண்ணீர் கிடைச்சுட கூடாதுன்னு விரும்பிய பல நல்ல உள்ளங்ககள் திட்டத்தை பாழாக்கியது ) .
கலைஞர் ஆரம்பித்து வைத்த வளர்ச்சி தான் இந்த மண்ணை இன்று வரை வீழ்ந்து விடாது காக்கின்றது என்பதை உடன்பிறப்புகளின் திமுக சாதனை பதிவுகளில் அறியலாம்..
கலைஞரின் சாதனை என்னன்னு ஒரு நண்பர் கேட்டார் ...வடக்க வந்து பார்..கஞ்சிக்கு இல்லாம தெருவில் கோடிக் கணக்கானோர் தினம் செத்து மடிவதை பார்த்த்துட்டு சொல் , தமிழ் நாட்ல இப்படி ஒரு நிலை இல்லாமல் மக்கள் கெளரவமா வாழ கலைஞர் தான் காரணம் என்பதை மனசாட்சி இருந்தால் சொல் என்று பதில் சொன்னேன் . .
சரி கலைஞர் தான் செய்தாரா , வேற யாரும் செய்லியான்னு கேட்கலாம் ...கியுபா விடுதலைகாக Carlos Manuel de Céspedes ஆரம்பிச்சு எத்தனையோ பேர் போராடி இருந்தாலும் காஸ்ட்ரோ ஏன் கொண்டாடப் படுகிறார் ..வளர்ச்சியை நீண்ட கால அடிப்படையில் வடிவமைத்தவர் ,தேசத்தை அதன் அடிப்படை கட்டமைப்பில் வலுவாக்கியவர் என்ற வகையில் பிடல் போற்றப்படுவது போல் தான்....கலைஞருக்கு முன்னும் பின்னும் பலர் நலப்பணிகள் செய்திருந்தாலும் தமிழகத்தை அதன் அடிப்படை கட்டமைப்பில் வலுவாக்கியவர் கலைஞர் ...அதனால் தான் அவரை அதிகம் கொண்டாடுகிறோம்.
கலைஞர் ஒரு சித்தாந்தம், பேரியக்கம்..தமிழகத்தை நிர்மாணித்த நவின சிற்பி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக