ஞாயிறு, 28 ஜூன், 2020

காங்கிரஸ் கே வி தங்கபாலு மருத்துவ மனையில் அனுமதி .. நெஞ்சுவலி ..

THANGKABALUnakkheeran.in -இரா. இளையசெல்வன் : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கே.வி.தங்கபாலு திடீரென சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது காங்கிரஸ் கட்சியினரிடையே பல விதமாக பரபரப்பாக பேசப்பட்டது. இதுகுறித்து நாம் விசாரித்தபோது, கே.வி.தங்கபாலுவுக்கு திடீரென நெஞ்சுவலி வந்ததால், உடனடியாக அவரை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றுள்ளனர். அவரை அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக ஆஞ்சியோ கிராம் சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவருக்கு ஆஞ்சியோ கிராம் சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக