ஞாயிறு, 28 ஜூன், 2020

ஜெயராஜ்- பெனிக்ஸ் நல்லா இருக்காங்க . மருத்துவ மனையில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் பச்சை பொய் வீடியோ


 tamil .oneindia.com தூத்துக்குடி: சாத்தான்குளத்தைச் சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகிய இருவரையும் மருத்துவமனையில் சேர்ந்த பிறகு, அவரது நண்பர்களிடம் இருவருக்கும் ஒன்றும் ஆகவில்லை, நான் உத்தரவாதம் கொடுக்கிறேன் என்று பொய் தகவலை சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்ரீதர் கூறிய வீடியோ தற்போது வைரலாக சுற்றி வருகிறது.
சாத்தான்குளம் அரசரடி தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் அந்த பகுதியில் பனமரக் கடை நடத்தி வந்தார். இவரது மகன் பென்னிக்ஸ். இவர் சாத்தான்குளம் பழைய பேருந்து நிலைய பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார்.
கடந்த 19ஆம் தேதி இரவு நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்கு அதிகமாக செல்போன் கடையை திறந்து வைத்ததாக கூறி காவல்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவரது தந்தை தேவராஜும், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இருவரையும் சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 போலீஸ் நிலையத்தில் வைத்து அவர்கள் மிக மோசமான வகையில் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிகிறது. இந்த நிலையில் 21ம் தேதி இருவரும் கோவில்பட்டி கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். அன்றைய தினம் இரவு, பென்னிக்ஸ் நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதையடுத்து சிறை வார்டன்கள், கண்காணிப்பாளர் ஆகியோர், கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அவர்களை சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு பரிசோதனை செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்கு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்த நிலையில், பென்னிக்ஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இன்னொரு பக்கம் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டிருந்த ஜெயராஜ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அடுத்த நாள், உயிரிழந்தார்.
ஆனால், முன்னதாக, கோவில்பட்டி மருத்துவமனையில், பென்னிக்ஸ் நண்பர்கள் மற்றும் உறவினர்கள், குழுமியுள்ளனர். என்னானதோ ஏதானதோ என்று பதைபதைப்புடன் இருந்த அவர்கள் முன்னிலையில் வந்த சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், நீங்கள் நினைப்பது போல அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நலமாக இருக்கிறார்கள். இதற்கு நான் உத்தரவாதம். தயவு செய்து நாளை காலை வாருங்கள். பேசிக்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் பென்னிக்ஸ் அன்றைய தினமும், ஜெயராஜ் மறுதினமும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இருவரது பின் பக்கத்திலும் கடுமையான தாக்குதல் நடந்து ரத்தம் வடிந்துள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அவ்வளவு சீரியஸ் நிலையில் இருந்தபோதும், காவல்துறை ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் இவ்வாறு பொய் தகவலை கூறியுள்ளார். இவர் தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக