ஞாயிறு, 28 ஜூன், 2020

தமிழர்களை ஆர் எஸ் எஸ் சேவா பாரதிக்கு காட்டியும் கூட்டியும் கொடுப்போர்.. காவியும் காக்கியும் ..

தமிழக ஆர் எஸ் எஸ் சேவா பாரதி  கும்பல்
தமிழர்களை RSS சேவா பாரதிக்கு கூட்டியும் காட்டியும் கொடுப்பதற்கு தமிழர்களின் வரிப்பணத்தில் சம்பளமும் காக்கி உடையும் எதற்கு?
தினகரன் : சாத்தான்குளம். இது ஒரு குளத்தின் பெயரா அல்லது ஊரின் பெயரா என்பது கூட தெரியாதவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை உண்டு.
ஏனென்றால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறிய நகரம். திருச்செந்தூரில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த சாத்தான்குளத்தை சற்றே பெரிய கிராமம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், இன்றைக்கோ சாத்தான்குளம் என்ற பெயர், உலகெங்கும் மனித உரிமை மீறலுக்கும், போலீஸ் அத்துமீறலுக்கும் எடுத்துக்காட்டாக மேற்கோள் காட்டப்படும் ஊராக மாறிவிட்டது.
சமூகவலைதளங்கள், ஊடகங்களில் கடந்த சில நாட்களாக சாத்தான்குளம் படுகொலைகள், ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலைக்கு நீதி வேண்டும் என்பது போன்ற  ஹாஷ்டேக்குகள் டிரெண்டிங்கில் உள்ளன. இதற்காக வெட்கி தலைகுனிய வேண்டியது தமிழக போலீஸ்தான்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் கடையை  திறந்து வைத்திருந்த விவகாரத்தில் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கொடூரமாக தாக்கி அவர்களது உயிரை பறித்துள்ளது தமிழக காவல் துறை. காக்கி உடுப்பும் கையில் தடியும் இருந்தால் இந்த உலகமே நமக்கு கீழ்படிய வேண்டும். எல்லாருமே நம் அடிமைகள் என்ற எண்ணம் சாதாரண காவலர் முதல் அதிகாரிகள் வரை உள்ளதே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம். சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கே போலீஸ் துறையே தவிர மக்களை கொல்வதற்கு அல்ல. ஊரடங்கு காலங்களில் மக்களை கண்காணிக்க வேண்டியது காவல் துறையின் கடமை இதற்கு முறையான கண்டிப்பு ,அறிவுறுத்தல் போன்ற ஆயுதங்களை கையாண்டால்போதும்.


அதைவிட்டுவிட்டு, அத்துமீறி தாக்குதல் நடத்தி 2 உயிர்களை பறித்திருப்பது ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாத செயல். தண்டிப்பது காவல்துறையே எனில் நீதிமன்றம் எதற்கு, சட்டங்கள் எதற்கு? போலீஸ் பயிற்சியின்போதே, ஒருமுறை காவல் நிலையத்தில் ஒருவன் அக்யூஸ்ட்டாக வந்தால் மீண்டும் அவன் காவல் நிலைய படியேற தயங்கும் அளவுக்கு அடித்து நொறுக்கு என்றுதான் சொல்லித்தருவார்கள் போலிருக்கிறது. காவல் துறை மக்களின் நண்பன் என்று கூறுவது வெறும் வெற்று விளம்பர கோஷமாகத்தான் இருக்கிறது. காவலர்கள் விடுமுறையின்றி இரவு, பகல் பாராமல் பணியாற்றுவது உண்மைதான்.

இதனால், அவர்களுக்கும் அவர்களது  குடும்பத்தினருக்கும் மன உளைச்சல் ஏற்படுகிறது என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். அதற்காக, கொரோனா காலத்தில் தனது வாழ்வாதாரத்துக்காக சில மணித்துளிகள் கூடுதலாக கடை திறந்து வைத்திருந்ததற்காக 2 வியாபாரிகளை சித்திரவதை செய்து அவர்களது சாவுக்கு காரணமாகலாமா? இது காவல் துறையில் உள்ள நல்லவர்களுக்கும் சேர்த்தல்லவா களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இது சாத்தானின் வேட்டை இதற்கு காரணமான காவல் துறையினரை காப்பாற்ற அரசு முயற்சிக்காமல்  சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுதர வேண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக