திங்கள், 8 ஜூன், 2020

மாணவர்களின் உயிரோடு விளையாடாதீர்கள்! – பொதுத்தேர்வு குறித்து மு.க.ஸ்டா

வெப்துனியா :தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 15 முதல் நடைபெற உள்ள நிலையில் தேர்வுகளை ஒத்திவைக்குமாறு மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் நடைபெற வேண்டிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. பிறகு ஜூன் முதல் தேதியில் தொடங்குவதாக இருந்த தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு ஜூன் 15ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது,
அதற்கான அனைத்து பணிகளையும் பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வரும் நிலையில், மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டும் வெளியாகியுள்ளது. ஆனால் தற்போது கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால் பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தீவிரமடைந்து வருகிறதே தவிர குறையும் சூழல் இல்லை. ஆட்சியாளர்கள் தங்கள் மறைமுக ஆதாயத்துக்காக மாணவர்களின் உயிருடன் விளையாட வேண்டாம். நோய் கட்டுப்படுத்தப்பட்டு சாதகமான சூழல் ஏற்படும்போது தேர்வை நடத்தி கொள்ளலாம்” என கூறியுள்ளார். ஆனால் ஹால் டிக்கெட் அளிப்பது முதல், ஆசிரியர்களை வரவழைப்பது, பாதுகாப்பு ஏற்பாடுகள் என அனைத்து செய்யப்பட்டுள்ளதால் தேர்வை ஒத்தி வைக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
Prasanth Karthick| Last Modified திங்கள், 8 ஜூன் 2020 (08:27 IST)
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 15 முதல் நடைபெற உள்ள நிலையில் தேர்வுகளை ஒத்திவைக்குமாறு மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் நடைபெற வேண்டிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. பிறகு ஜூன் முதல் தேதியில் தொடங்குவதாக இருந்த தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு ஜூன் 15ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது, அதற்கான அனைத்து பணிகளையும் பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வரும் நிலையில், மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டும் வெளியாகியுள்ளது.

ஆனால் தற்போது கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால் பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தீவிரமடைந்து வருகிறதே தவிர குறையும் சூழல் இல்லை. ஆட்சியாளர்கள் தங்கள் மறைமுக ஆதாயத்துக்காக மாணவர்களின் உயிருடன் விளையாட வேண்டாம். நோய் கட்டுப்படுத்தப்பட்டு சாதகமான சூழல் ஏற்படும்போது தேர்வை நடத்தி கொள்ளலாம்” என கூறியுள்ளார்.

ஆனால் ஹால் டிக்கெட் அளிப்பது முதல், ஆசிரியர்களை வரவழைப்பது, பாதுகாப்பு ஏற்பாடுகள் என அனைத்து செய்யப்பட்டுள்ளதால் தேர்வை ஒத்தி வைக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக