ஞாயிறு, 21 ஜூன், 2020

இந்தியா - சீனா ... நடப்பது அத்தனையும் நாடகம்...

Karthikeyan Fastura : உலகமயமாக்களில் எந்த ஒரு நாடும் இன்னொரு நாட்டினை சாராமல் வாழ்ந்திடமுடியாது. இயற்கை கூட தற்சார்பினை ஏற்காது.
டிவி, மொபைல்களை மக்களில் சிலர் உணர்ச்சிவசப்பட்டு, அறிவை பயன்படுத்தாமல்
நொறுக்குவதை பார்த்தால் உண்மையில் செம காமெடியாக, பாவமாக இருக்கிறது.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களில் சீனாவின் பங்களிப்பு இருக்கிறது. எங்களுடைய கமாடிட்டி வர்த்தக மொபைல்-ஆப்காக உலோக உற்பத்தி நாடுகளை கவனிப்பதுண்டு. அலுமினியம், செம்பு, ஜிங்க், நிக்கல் உள்ளிட்ட Base Metals என்றால் அது சீனாவின் டேட்டாவை தான் அனலைஸ் பண்ணவேண்டும். இந்த உலோகங்கள் மூலமாக தான் மின் சாதனங்கள், மின்னணு சாதனங்கள், பண்ட பாத்திரங்கள் எல்லாம் உருவாக்கப்படுகிறது.
பாராசிட்டமால் என்ற தலைவலி மாத்திரையின் மூலப்பொருளாகட்டும், சர்க்கரைவியாதிக்கான மூலப்பொருளாக இருக்கட்டும் அல்லது எண்ணற்ற மருந்துகளின் மூலப்பொருளாகட்டும் சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். சுதந்திர போராட்ட காலத்தில் காந்தியின் அந்நியதுணி பகிஷ்கரிப்பு ஒரு எதிர்ப்பு வடிமாக பார்க்கப்பட்டாலும் அது பிரிட்டிஷாரின் தொழிலை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. மாறாக மக்களைத்தான் அதிகம் பாதித்தது. உணர்ச்சிவசப்பட்டு எரித்ததால் போதிய ஆடை இல்லாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளானர். பருத்தி உற்பத்தி போதுமான அளவிற்கு இல்லை. கதராடை விலை மிக அதிகமாக இருந்தது.
காந்தி சொன்னார் என்பதற்காக சுதந்திரத்திற்கு பிறகு கதராடையை மட்டும் நாம் பயன்படுத்தவுமில்லை. காலகாலமாக போதிய ஆடையில்லாத பெரும்கூட்டம் இருந்தது. காவி ஆடை என்பது கூட காவிசாயத்தால் உருவானதில்லை. போதிய ஆடை இல்லாதவர்கள் புழுதிபடிந்த ஒரே ஆடையை மீண்டும் மீண்டும் பல காலம் பயன்படுத்தியதால் வந்ததேநைலான் ஆடைகள் பெருமளவு உற்பத்தியான பிறகே ஆடைகளின் விலை வெகுவாக குறைந்தது. எல்லோருக்கும் சென்று சேர்ந்தது.
எல்லைகளில் நாடுகள் ஒன்றை ஒன்று உரசிக்கொள்வது உலகெங்கிலும் காண்பதே. அதிலும் எண்ணற்ற வியாபார அரசியல் இருக்கிறது . சீனா இந்தியாவுடன் மல்லுக்கு நிற்பதிற்கு பின்னாலுள்ள அரசியல் காரணம் என்ன என்று தான் யோசிக்கவேண்டும். வீரர்களை கொல்லும் அளவிற்கு செல்கிறார்கள் என்றால் நாம அரசியல்ரீதியாக, பொருளாதார ரீதியாக ரெம்பவும் வீக்காக இருக்கிறோம் என்பது ஒரு கோணம். வேறு எங்கோ ஓரிடத்தில் நாம் வகையாக மாட்டிக்கொண்டோம். அல்லது பீகார் தேர்தலுக்காக நடத்தப்படும் அரசியல் காய்நகர்த்தலாக இருக்கக்கூடும். ஏனென்றால் பாகிஸ்தானுடன் இப்படி ஒரு தாக்குதலை காட்டித் தான் பாராளுமன்ற தேர்தலில் ஒரு நாடகம் நடத்தினார்கள். அப்பவும் சரி, இப்பவும் சரி அவமானப்படுத்தப்பட்டது ராணுவமும், கொல்லப்பட்டது கடைநிலை ராணுவ வீரர்களும் தான்.
மற்றபடி நமக்கு வலுவில்லாமல் எல்லாம் இல்லை. சீனாவையும், இந்தியாவையும் ராணுவதளவாடங்களையும், ஆயுதங்களையும், வீரர்களையும் எண்ணிக்கை அடிப்படையில் ஒப்பிட்டு நாம வீக் என்று புலம்பவும் வேண்டியதில்லை. போர் என்று வந்தால் அவனொன்றும் அத்தனையும் களத்தில்
இறக்கமாட்டான். இறக்கவும் முடியாது. சீன பார்டருக்கு தேவையான ஆயுதங்களும், வீரர்களும் கிமீக்கு இத்தனை என்ற Ratioவில் அவர்களுக்கு இணையாகவே இன்னமும் சொல்லப்போனால் கூடுதலாகவே வைத்திருக்கிறோம். அதனால் அவனுக்கு அஞ்சவேண்டியதே இல்லை. அவன் வீம்பு காட்டினால் நாமும் தைரியமாக வீம்பு காட்டலாம். அவன் தாக்கினால் நாமும் பின்வாங்காமல், பேனரை தூக்காமல், துப்பாக்கியை தூக்கி தாக்கலாம். எந்த குறையும் வந்துவிடப் போவதில்லை. நம் வீரர்களை நம் தலைமை தான் கட்டிப்போட்டு வைத்து சாகடிக்கிறது. அதேபோல அவனுக்கும் பேச்சுவார்த்தைக்கு தேவை நிறைய இருக்கிறது. அவன் பேச்சுவார்த்தை வந்தால் பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால் இங்கே நடப்பது அத்தனையும் நாடகம்.
சுயநல அரசியல் செய்யும் இந்த நாட்டின் அரசியல் தலைமையை தான் தெருவில் தூக்கி எறியவேண்டும். அனைவரின் உழைப்பாலும், உலக அமைதியாலும், அறிவியலாலும் நமக்கு கிடைத்த அனுகூலத்தையா உடைப்பது அல்லது வெறுப்பது ? பைத்தியகாரதனமா இல்லை ?!...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக