ஞாயிறு, 21 ஜூன், 2020

பிணத்தின் ஆடையை அணிய வேண்டும். உடைந்த சட்டியில் சோறுண்ண வேண்டும். இரும்பு பித்தளை நகைகளைத்தான் அணிய... . மனு தர்மம்

Manitham Mattun : மனு அதர்மம் . பிராமணர் உயர்வு ''மனிதராசி பல்கும் பொருட்டாகவே,  பிரம்ம, க்ஷத்ரிய, வைசிய, சூத்ரஎன்ற நால் வருணத்தையும் வேதஞானம், புவிபுரத்தல், செல்வமீட்டல், ஏவல்புரிதல் என்ற கடப்பாடுகளின் வழியே வகுத்து வைத்தார்.
• இவர்கள் இறைவனுடைய முகம், தோள், தொடை, பாதம்ஆகியபகுதிகளினின்றும் தோற்றமுற்றனர் (மனு 1 : 31).
• 'படுக்கை, ஆசனம், அழகு செய்தல், காமம், சினம், பொய், துரோகஎண்ணம்இவற்றை மாதரின் பொருட்டே மனு படைத்தார்' (9 : 17).
• மாதர்க்குப் பிறவியைத் தூய்மையாக்கும் சமஸ்காரங்கள் மந்திரப்பூர்வமாகச் செய்வித்தல்
''ஊருக்கு வெளியில் சண்டாளனும், ஸ்வபாகனும் குடியிருக்கவும், இவர்கள் உலோகத்தாலான பாத்திரங்கள் உபயோகிக்கக் கூடாது. 

இவர்கள் தீண்டிய பாத்திரங்கள் துலக்கினாலும் தூய்மையாகா. 
நாய், கழுதை இவற்றை இவர்கள் வளர்க்கலாம். மாடு முதலியவை வைத்துப் பிழைக்கக் கூடாது'' (10 : 52)''
• இவர்கள் பிணத்தின் ஆடையை அணிய வேண்டும். உடைந்த சட்டியில் சோறுண்ண வேண்டும். இரும்பு பித்தளை நகைகளை அணியவேண்டும். எப்போதும் தொழிலுக்காகச் சஞ்சரிக்க வேண்டும்'' (10 : 52).'
• 'நற்கருமங்கள் நடைபெறுகையில், இவர்களைக்

காண்பதோ,பேசுவதோகூடாது. இவர்கள் தங்கள் வகுப்பிலேயே பெண் எடுக்கவும்கொடுக்கவும், கடன்கோடலும் வேண்டும்'' (10 : 53).
• ''இவர்களுக்கு நேரே உணவு பரிமாறல், ஏவலாளரைக் கொண்டு,உடைந்தசட்டியில், அன்னமிட்டு வைக்க வேண்டும். இவர்கள் ஊரிலும்,நகரிலும்இரவில் திரியக்கூடாது'' (10 : 54).

இதை பார்த்தால் இரத்தம் கொதிக்கிறது.
பிறப்பினடிப்படையில் இந்துமதத்தில் ஜாதி என்பது உண்மை இல்லை என பம்மாத்து செய்யும் இந்த்துத்துவ வியாதிகள் அவர்கள் சொல்லுவது உண்மையென்றால் என்ன செய்திருக்கவேண்டும்?
பிறப்பினடிப்படையில் மனிதர்களை பிரித்து இழிவு செய்யும் மனுதர்மத்தை இந்துமதத்தின் முதல் எதிரியாக பாவித்து எரித்தொழிக்கவேண்டும்.மனுவை நம்புபவன்,பரப்புபவன் அயோக்கியன் இந்துமதத்துக்கு எதிரி என சூழுரைக்கவேண்டும்.செய்தார்களா.1927 அம்பேத்கார் மட்டுமே அதை செய்தார்
இவர்கள்
1.இன்று சோ வின் துக்ளக்கில் மனுதர்ம பொன் மொழிகளை கானலாம்
2.இந்தியா விடுதலை பெற்றவுடன் உச்சநீதிமன்றம் உருவாகும் நிலையில் அந் நீதிமன்ற வளாகத்தில் மனுவின் சிலையைநிறுவ வேண்டுமென்று வேண்டுகோள் முன் வைக்கப்பட்டது
3.ராஜஸ்தான் மாநிலத்தை பா.ஜ.க. ஆட்சி புரிந்தபோது ஜெய்ப்பூரில் உள்ளஉயர் நீதிமன்ற வளாகத்தில் மனுவுக்குச் சிலை நிறுவப்பட்டது.
4.பாரதிய ஜனதா ஆட்சி புரிந்தபோது இமாசலப் பிரதேசத்தில் மனாலிஎன்னுமிடத்தில் ஏற்கனவே உள்ள மனு கோயிலைப் பல லட்சம் செலவு செய்துபுதுப்பித்துள்ளனர்
5.''1992 ஏப்ரல் 18, 19 தேதிகளில் மதுராவில் உத்தரப்பிரதேசமாநில இந்து வழக்கறிஞர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் மாநில பா.ஜ.க.அரசின் அட்வகேட் ஜெனரல் வி.கே.என். சவுதாரி பேசுகையில் எல்லாக்காலங்களுக்கும் ஏற்ற சட்ட நூல் மனுஸ்மிருதிதான் என்று குறிப்பிட்டார். இதனைஆர்.எஸ்.எஸ். சின் அதிகாரப்பூர்வமான பத்திரிகையான 'ஆர்கனைசர்' (மே 10, 1992) வெளியிட்டுள்ளது'
6.விசுவஇந்து பரிஷத் 1982 இல் நிகழ்த்திய ஊர்வலத்தில் மனு தர்ம சாஸ்திரத்தின் ஒருபிரதி எடுத்துச் செல்லப்பட்டது.
ஆனால் வாதத்திற்கு போனால் நாங்கள் மனுவை ஆதரிக்கவில்லை
அது காலாவதியாகிவிட்டது(?) என சப்பைகட்டு கட்டுவார்கள்.இதுதான் காவிகளின் இரட்டை நாக்கு என்பது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக