திங்கள், 15 ஜூன், 2020

மாணவி தீக்குளித்தார் .. குளிப்பதை படமெடுத்த வாலிபர்களால் கொடுரம்

கைது செய்யப்பட்ட 3 பேர்தீக்குளித்த பள்ளி மாணவிபழிவாங்குறதுக்காகத்தான் எடுத்தோம்!’-3 இளைஞர்களால் விபரீத முடிவெடுத்த வேலூர் மாணவி
 vikatan.com - லோகேஸ்வரன்.கோ :
வேலூர்கைது செய்யப்பட்ட 3 பேர்
வாட்ஸ்-அப்பைப் பார்த்தபோது, நான் குளிக்கிற வீடியோவை அனுப்பியிருந்தாங்க. அந்த வீடியோவை டெலிட் பண்ணச் சொல்லி அவங்களுக்கு போன் பண்ணேன். என்கிட்ட ஐந்தாயிரம் ரூபாய் கேட்டாங்க. வேலூர் பாகாயத்தை அடுத்துள்ள துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள அரசுப் பள்ளியில் நடப்புக் கல்வியாண்டில் ப்ளஸ் 1 செல்லவிருந்தார். இந்த மாணவி, தன் வீட்டின் பின்புறம் உள்ள திறந்தவெளிக் குளியலறையில் குளித்துக்கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர், அந்த வீடியோவை மாணவியிடமே காண்பித்து ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியுள்ளனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து வெளியில் கூற முடியாமல் தற்கொலை முடிவுக்குத் தள்ளப்பட்டார். சமையில் அறையில் இருந்த கெரசினை தன் உடலில் ஊற்றித் தீ வைத்துக்கொண்டு தெருவுக்கு வந்தார். இதைப் பார்த்து திடுக்கிட்ட அப்பகுதி மக்கள், மாணவியைக் காப்பாற்றுவதற்காக முயற்சிசெய்தனர். அங்குள்ள

அங்கிருந்த பொதுமக்கள் தீயை அணைத்து வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். 90 சதவிகித தீக்காயங்களுடன் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவி, `உயிர் பிழைப்பது சந்தேகம்’ என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த துயரச் சம்பவம் குறித்து மாணவியின் தந்தை பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார், மருத்துவமனைக்குச் சென்று மாணவியின் வாக்குமூலத்தை வீடியோவாகப் பதிவுசெய்தனர். வாக்குமூல வீடியோவில் மாணவி, ``நான் குளிக்கிறதை வீடியோ எடுத்தவனுங்க என் சித்தப்பா செல்போனுக்கு போன் பண்ணாங்க. போனை நான்தான் எடுத்துப் பேசினேன். எங்கிட்ட அவனுங்க, `உன்னையும் உன் சித்தப்பனையும் பழிவாங்குறதுக்காக உனக்கே தெரியாம ஒரு வீடியோ எடுத்திருக்கிறோம். இந்த நம்பர்ல இருக்கிற வாட்ஸ்-அப்புக்கு அனுப்பியிருக்கிறோம். நீ பார்த்திட்டு லைன்ல வா... நாங்க சொல்றதை கேட்கலைன்னா சோஷியல் மீடியாவுல அந்த வீடியோவைப் போட்டிருவோம்’னு மிரட்டினாங்க.
வாட்ஸ்-அப்பை பார்த்தபோது, நான் குளிக்கிற வீடியோவை அனுப்பியிருந்தாங்க. அந்த வீடியோவை டெலிட் பண்ணச் சொல்லி அவங்களுக்கு போன் பண்ணேன். என்கிட்ட ஐந்தாயிரம் ரூபாய் கேட்டாங்க. என் சித்திகிட்ட நடந்ததைச் சொல்லி பணம் கேட்டேன்.`அவனுங்களுக்கு பணம் தரவேண்டாம். நாம போலீஸ்கிட்ட போவோம்’னு சித்தி சொன்னாங்க. அதுக்குள்ள அவனுங்க திரும்பவும் போன் பண்ணி, ‘வேலூர் கோட்டைக்கு வா...’னு கூப்பிட்டாங்க. >நான் முடியாதுனு சொல்லிட்டேன்.`பக்கத்துல இருக்கிற ஏரிக்கரை மலைக்காவது வாடி’னு சொன்னாங்க. நானும் அங்க போனேன். மூணு பேர்ல ஒருத்தனை பிடிச்சு வச்சுட்டு சத்தம் போட்டேன். அப்ப ரெண்டு பேர் ஓடிட்டானுங்க. பிடிபட்டவன்கிட்ட இருந்த செல்போனை பிடுங்கி அதிலிருந்த நான் குளிக்கிற வீடியோவை டெலிட் பண்ணேன். அதுல, என் பாட்டி குளிக்கிற வீடியோ மட்டுமில்ல நிறைய பொண்ணுங்க குளிக்கிற வீடியோவும் இருந்துச்சி. எல்லா வீடியோவையும் நான் டெலிட் பண்ணிட்டு இருந்தப்போ, என் தலையில் கல்லால் தாக்கிட்டு அவனும் ஓடிட்டான். அப்புறம் நான் வீட்டுக்கு வந்து கொளுத்திக்கிட்டேன்’’ என்று அந்த மாணவி கூறியிருக்கிறார்.
மாணவியின் வாக்குமூலத்தை வைத்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஆபாச வீடியோ எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த பூனைக்கண்ணன் என்கிற ஆகாஷ், பாலாஜி, கணபதி என்கிற தாமஸ் ஆகிய மூன்று பேரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம், வேலூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக