சனி, 27 ஜூன், 2020

தமிழக போலீஸ் ஆர் எஸ் எஸ் குண்டர் படை? சாத்தான்குளத்தில் காவல்துறை சேவா பாரதி.. ஆர் எஸ் எஸ் வெறியாட்டம்


Venkat Ramanujam : · அடித்த கொன்றது போலிசா அல்லது #rss ஆ
ப ஜக வை ஆக்கிரமித்த ஓர் சூழ் சாதி கைபர் கனவாய் வந்தேறி ராஜாஷர்மாக்கள் தீடிர் என போலிஸ் பாசம் வந்தது என்பது ஒரு புள்ளி ..
  சேவா பாரதிக்கும் #RSS க்கும் உள்ள் தொடர்பு என்பது ஒரு புள்ளி ..
 சேவா பாரதி மாற்று மதத்தினரை போலிஸ் ஸ்டேஷ்னில் கொல்லும் அளவுக்கு போலிசை செயல் இழக்க செய்துள்ளது ஒரு புள்ளி .. ..
 இந்த சேவா பாரதி எந்த அடிப்படையில் friends of police க்கு ஊழியம்
செய்கிறார்கள் என்பது ஒரு புள்ளி .. இந்த சேவா பாரதி யாரால் நடத்த படுகிறது என்பது ஒரு புள்ளி .. இப்படி பல புள்ளிகள் ஒன்றினைத்தால் அதில் தெரியும் கோலத்தில் மோகன் பகவ்த்களின் குரூர உண்மை முகம் தெரியலாம் அல்லவா
சாத்தான்குளம்: காவல்துறைக்கு எதிரான எந்தவித போராட்டமும் வெகுஜன விரோத போராட்டமாகவே கருதப்படும் – எச். ராஜா.
 சாத்தான்குளம் சம்பவத்திற்கு பலரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சம்பவம் தொடர்பாக ட்விட்டரில் “Justice For Jeyaraj And Fenix” என்கிற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், நடிகர்கள் ஜீவா, ஜெயம் ரவி என சமூகத்தில் பல தரப்பினரும் இந்த சம்பவத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இப்படியான சூழலில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா, “காவலர் வில்சன் படுகொலையை கண்டித்து போராடாத வர்த்தக சங்கங்கள் இன்று போராடுவது ஏன்? இந்த வர்த்தக சங்கங்களை இயக்கும் தீய சக்திகள் எவை?” என கேள்வி எழுப்பி உள்ளார்.
வெகுஜன விரோத போராட்டம் அவர் பகிர்ந்துள்ள ஃபேஸ்புக் பதிவில், “சாத்தான்குளத்தில் போலீஸ் கஸ்டடியில் நடந்த இறப்பு ( custodial death) வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு உடனடியாக 4 காவலரையும் இடைநீக்கம் செய்துள்ளது. இதற்கான மேஜிஸ்திரேட் நீதி விசாரணை நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் ஒரு காவல் நிலையத்தில் 4 பேர் செய்த குற்றத்திற்கு காவல்துறை முழுவதையும் கண்டனத்திற்கு உள்ளாக்குவது முறையல்ல.’’ என கூறியுள்ளார்


H Raja
20 hours ago
சாத்தான்குளத்தில் போலீஸ் கஸ்டடியில் நடந்த இறப்பு ( custodial death) வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு உடனடியாக 4 காவலரையும் சஸ்பென்ட் செய்துள்ளது. இதற்கான மேஜிஸ்திரேட் நீதி விசாரணை நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் ஒரு காவல் நிலையத்தில் 4 பேர் செய்த குற்றத்திற்கு காவல்துறை முழுவதையும் கண்டனத்திற்கு உள்ளாக்குவது முறையல்ல. சீனக் கொரோனாவிற்கு எதிரான யுத்தத்தில் காவல்துறை அரும் பணியாற்றி வருகிறது. இந்த நேரத்தில் காவல்துறைக்கு எதிரான எந்தவித போராட்டமும் வெகுஜன விரோத போராட்டமாகவே கருதப்படும். காவலர் வில்சன் படுகொலையை கண்டித்து போராடாது வர்த்தக சங்கங்கள் இன்று போராடுவது ஏன்? இந்த வர்த்தக சங்கங்களை இயக்கும் தீய சக்திகள் எவை என்பது குறித்து உளவுத்துறை எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும்.
இச்சம்பவத்தை அமெரிக்க ப்ளாயிட் சம்பவத்துடன் ஒப்பிட்டு சிலர் பேசுவது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
தேசவிரோத சீனக் கூலிகள் சீனாவின் செம்புக்கு இங்கு மார்க்கெட் உருவாக்க ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சர்ச்சில் மணியடித்து கலவரம் செய்ததை மறந்துவிடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்த கொடூரமான சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நீதி விசாரணையின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித இரு கருத்துக்கும் இடமில்லை. ஆனால் இதை வாய்ப்பாகப் பயன் படுத்தி நாட்டை சில தீய சக்திகள் கலவர பூமியாக மாற்றுவதை அனுமதிக்க முடியாது.
தொடர்ந்து இதுபற்றி பேசுவோம். படிப்போம். பகிர்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக