ஞாயிறு, 21 ஜூன், 2020

பிரம்ம ரிஷி வசிஷ்டரின் துர்வசனங்கள் ..: காம இச்சைக்கு தவிர வேறு எந்த ஒரு சாஸ்திர

Dhinakaran Chelliah : வசிஷ்டரை மிகப் பெரிய பிரம்ம ரிஷியாக புராணங்களில் இதுவரை படித்தவர்கள்,அவரது பெயரால் எழுதப்பட்ட தர்ம சாஸ்திர நூலில் எழுதப்பட்டுள்ள விசயங்களைப் படித்தால் அதிர்ச்சிக்கு ஆளாவது உறுதி.
சூத்திரர்களுக்கு வேதம் ஓதும் உரிமை மறுக்கப் பட்டதற்கான காரணத்தை எளிமையாக விளக்குகிறது வசிஷ்ட ரிஷி சொல்லி எழுதப்பட்டதாக வசிஷ்டா சம்ஹிதா எனும் நூல்.இந்த நூலும் இந்து வேத வைதீக சனாதன நூல்களில் தர்ம சாஸ்திர நூல் வரிசையில் சொல்லப்படும் முக்கிய நூல்களில் ஒன்று. இந்த நூலில் உள்ள ஒரு சில ஸ்லோகங்கள் உங்கள் பார்வைக்கு;
சூத்திரப் பெண்ணுக்கும் பிராஹ்மண பையனுக்கும் பிறந்தவன் ‘ப்ரசவா’ஆவான்.’ப்ரசவா’என்றால் உயிரோடு இருந்தாலும் பிணத்திற்குச் சமம் ஆகும். இறந்து போன சடலத்தை சவம் என்கிறோம். சூத்திரர்கள் சடலத்தைப் போன்றவர்கள், அதனால்தான் வேதங்களை அவர்களின் முன் ஓதுதல் கூடாது.

சூத்திரனுக்கு தர்ம சாஸ்திரத்தை ஓதுகிறவனும், சாஸ்திர கர்ம அநுஷ்டானங்களை செய்வதற்கு அனுமதிக்கிறவனும், சூத்திரனுடன் சகவாசம் வைத்துக் கொள்கிறவனும் ‘அஸம்விரித்தா’ எனும் கொடிய நரகத்தில் அவனுடன் சேர்த்து தள்ளப்படுவர்.
அக்னியில் வேள்வி கர்மங்களை செய்யும் வைதீகர்கள், அது முடியம் வரை சூத்திரப் பெண்களை நெருங்குதல் கூடாது.கருப்பு இனத்தவளான அவள் நாய் போன்றவள்.காம இச்சைக்குத் தவிர, அவளை வேறு எந்த ஒரு சாஸ்திர சம்பிரதாயங்களிலும் ஈடுபடுத்துதல் ஆகாது!
-வசிஷ்டா சம்ஹிதா(அத் 16)
The son of a Brahmana by a Sudra woman is a Parasava. They say that the condition of a Parasava is that of one, who, albeit living, is a corpse. The designation of a dead body is Sava. Some says that a Sudra is a corpse; therefore, the Veda must not be recited near a Sudra.
He, who explains the sacred law to him, he, who orders him to perform a religious rite, goes, together with that very man, into the dreadful hell called Asamvrita.
One, who had placed the sacred fire, shall never approach a Sudra woman; for she, belonging to the black race, is like a bitch, not for religious rites but for pleasure.
-Vasishtha Samhita (Ch.16)
குறிப்பு: பிண்ணூட்டத்தில் வசிஷ்டா சம்ஹிதா நூலின் ஒரு சில பக்கங்களை இணைத்துள்ளேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக