வியாழன், 18 ஜூன், 2020

தமிழக ஊர்களின் பெயர் மாற்றம் கைவிடப்படுகிறது .பிந்திய செய்தி

தமிழ்நாட்டில் உள்ள ஊர்கள், இடங்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்புக்கு ஏற்பக ஆங்கிலத்தில் ஒலிக்கும் வகையில் திருத்தி வெளியிடப்பட்ட அரசாணை திரும்பப் பெறப்படுவதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் தெரிவித்திருக்கிறார்.
  தினகரன் :சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டின் ஊர்ப்பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுகின்ற முறையில் மாற்றங்கள் செய்து தமிழக அரசு பிறப்பித்து இருக்கின்ற ஆணை வரவேற்கத்தக்கது. இதில், தூத்துக்குடி, திருவாரூர் ஆகிய ஊர்களில் உள்ள த என்ற எழுத்திற்கும், ‘Th’ என்று உள்ளது. அதுபோலவே, பல ஊர்களில் த என்ற எழுத்திற்கு ‘Th’ என எழுதி இருக்கிறார்கள். ஆனால், திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஊர்களின் பெயர்களில், த என்ற எழுத்திற்கு வெறுமனே  T என்ற ஆங்கில எழுத்து மட்டுமே உள்ளது. வேலி என்பதற்கான நெடில் எழுத்திலும் மாற்றம் இல்லை. எனவே, அதை முன்பு போலவே, டிருநெல்வெலி என்றே வாசிக்க முடியும்.  அதேபோல, தென்காசி என்பதும் ஆங்கிலத்தில் டென்கசி என்றே வாசிக்கக்கூடியதாகவே இருக்கிறது. திருத்தம் தேவை.


 சோழிங்கநல்லூர் ஆங்கிலத்தில் ‘Solinganalloor’ ஆகி இருக்கிறது. ஆனால், எழும்பூர் Ezhumboor ஆகி இருக்கிறது.  இரண்டு ஊர்களிலும், சிறப்பு ‘ழ’ கரம்தான் இருக்கிறது. ஏன் இரண்டு விதமாக எழுதுகிறார்கள்? ‘Ezhumboor என்று எழுதினால், அதை ‘எஸ்ஹும்பூர்’ என்றுதான் பிற மொழிக்காரர்கள் வாசிப்பார்கள். ‘எழும்பூர்’ என வாசிக்க மாட்டார்கள். இது மிகப்பெரிய குழப்பம். எனவே, ‘Elumpoor’ என எழுதுவதே சரி. ‘தமிழ்நாடு’ என்பதை ஆங்கிலத்தில் Tamilnadu’ என்று எழுதுகின்றார்கள். அந்த ‘ழ’ வில் மாற்றம் இல்லை. பொதுவாக, ‘zha என்பதை பிறமொழிக்காரர்கள் ‘ழ’ என வாசிப்பது இல்லை. வட இந்தியர்கள் கூட, ‘டமில் நடு’ என்றுதான் சொல்கின்றார்கள். அதையும் Thamilnaadu என்று எழுதுவதே பொருத்தமாக இருக்கும். சுட்டிக்காட்டப்பட்டு இருக்கின்ற சில குறைகளை, அரசு களைய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக