ஞாயிறு, 21 ஜூன், 2020

திமுக எம் எல் ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா பாதிப்பு .. ரிஷிவந்தியம்

 மாலைமலர் :விழுப்புரம்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல்
வேகமாக பரவி வருகிறது. இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 2,396 பேருக்கு தமிழகத்தில் கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 704 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வான வசந்தம் கார்த்திகேயனுக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே அவரது குடும்பத்தில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், கார்த்திகேயனுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக