வியாழன், 4 ஜூன், 2020

டான் அசோக் ..புலி பிரசாரம் .... சமுக வலையில் சில கருத்துக்கள்

Don Ashok -: super sir. நான் உங்களோடு முற்றிலும் உடன்படுகிறேன். பல பெரியாரிஸ்டுகள் என்னைத் திட்டிக்கொண்டிருப்பதற்கு காரணம் நீங்கள் சொன்ன எல்லா விமர்சனத்தையும் அவர்கள் மீது நான் துணிச்சலால வைத்ததால்தான் சார். நீங்கள் இன்னும் சத்தமாகப் பேச வேண்டும். ஈழத்தமிழர்கள் வேறு புலிகள் வேறு என்பதை நாம் சொல்வதைவிட நீங்கள் எல்லாம் சத்தமாக சொல்ல வேண்டும். செருப்பால் அடிததாற்போல சொல்லவேண்டும். அப்படி நீங்கள் சொல்லி, உங்களைப் போன்றவர்களின் குரல் ஓங்கும்போது நானெல்லாம் அதைப் பற்றி பேசவே மாட்டேன் சார். பேசவும்  தேவை இருக்காது. என் கருத்தையும் திரும்ப பெற்றுக்கொள்கிறேன் சார்
Radha Manohar : நன்றி தோழர் பதிவை நீக்கி விட்டேன் .தமிழகத்தில் இருந்து புலி பஜனை நிறுத்தப்படும் வரை கலைஞர் மீதான துர்பிரசாரத்தை அவர்கள் தொடரவே செய்வார்கள் . ஏனெனில் திமுக எதிர்ப்பாளர்களால் திட்டமிட்ட ஒரு ஆயுதமாகவே புலிகளின் பிரசார இயந்திரம் உருவாக்கப்பட்டது . நெடுமா , சீமா மற்றும் பெரியார் இயக்கங்கள் இந்த வேலை திட்டத்தை இன்று வரை முன்னெடுக்கிறார்கள் . புலம்பெயர் புலிகளின் ஆக்சிஜன் விநியோகஸ்த்தர்களே இவர்கள்தான் . தமிழகத்தில் புராஜெக்ட் செய்யப்படும் புலி பிம்பம்தான் அவர்களுக்கு ஆக்சிஜன்


நேற்றையை பதிவு :
மிஸ்டர் அசோக் .. சிலோன் தமிழன்ல பாதி பேரு என்ன நினைக்கிறார்கள் என்று தாங்கள் எந்த புள்ளிவிபர அடிப்படையில் கண்டு பிடித்தீர்கள்?
இது ஒரு பச்சை வெறுப்பு குற்றமாகும்  Hate Crime!
இதுவே நீங்கள் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் இருந்து கொண்டு கூறியிருந்தால் பெரிய சட்ட சிக்கலில் சிக்கி இருப்பீர்கள் .. இப்பொழுதும் ஒன்றும் தாமதமாகி விடவில்லை . இந்த கருத்தை தாங்கள் மீள பெறலாம்
திமுக ஆதரவாளர் என்று உங்களை நீங்களே கூறிக்கொண்டு இருப்பதை நீங்கள் நிறுத்தவது திமுகவுக்கு நீங்கள் செய்யும் மிக பெரிய தொண்டாக இருக்கும் என்று கருதுகிறேன் .
நீங்கள் குறிப்பிட்ட பாதி பேர்வழிகள் என்பது புலி ஆதரவை உயர்த்தி பிடிக்கும் தமிழக பெரியார்வாதிகள் என்பதாக இருக்க கூடும் . அவர்களை நேரடியாக குற்றம் சாட்ட பயப்படும் தாங்கள் ஒட்டு மொத்த இலங்கை தமிழர்கள் மீது சேறு வாரி வீசும்  கயமையை நிறுத்தவேண்டும் .
பாதி பேர்கள் புலியை ஆதரிக்கிறார்கள் என்று தங்களின் கருத்தை எந்த ஒரு ஆதாரமும் இன்றி கூறுவது தங்களின் கத்து குட்டிதனம் என்று சும்மா விட்டுவிட முடியாது .
ஏனெனில் நீங்கள் வீசுவது விஷ விதை.

போருக்கு பின்னால் நடைபெற்ற அத்தனை தேர்தல்களிலும் புலிகளுக்கு எதிரானவர்களே அங்கு வெற்றி பெறுகிறார்களே. இந்த சாதாரண உண்மை கூட தெரியாமல் எப்படி கூறும் அசட்டுத்தனம் உங்களுக்கு வந்தது?
புலி பஜனை பாடும் பெரியார் வியாபாரிகளை விமர்சிக்கும் தைரியத்தை வளர்த்து கொள்ளுங்கள்  .. அதற்கு முயலாமல்  அவர்கள் மீது வைக்க வேண்டிய குற்ற சாட்டை ஈழத்தமிழர்கள் மீது வைத்தால் அது நியாயம் அல்ல.
இது தொடர்ந்தால் இது பற்றி Hate crime புகார் கொடுக்க வேண்டி வரும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக