வியாழன், 4 ஜூன், 2020

பாலங்கள் கட்டிய கலைஞர் .. 80 பாலங்கள் பற்றிய விபர பட்டியல்

திருநெல்வேலி திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம்
Muralidharan Pb : தற்கால தமிழ்நாட்டின் தந்தை என்பது ஏன்?
தமிழ்நாடு போன்ற பெரிய மாநிலங்களுக்கு சாலை போக்குவரத்து இன்றியமையாத ஒன்று.
கோவை அவினாசி ரோடு மேம்பாலம்
அப்படி இருக்கையில் பாலங்கள், மேம்பாலங்கள் கட்டினால் தான் போக்குவரத்து நெரிசல் இன்றி பயணிக்க ஏதுவாக இருக்கும் என்பதை உணர்ந்து தலைவர் கலைஞர் கட்டிய 2000 ஆண்டு வரை பாலங்கள்.
A Sivakumar :  கலைஞரும் மேம்பாலங்களும்
தலைநகர் சென்னைக்கு வெளியே தலைவர் கலைஞர் பல்வேறு காலகட்டங்களில் உருவாக்கிய பாலங்கள்,
1) தஞ்சை திருச்சி மாவட்டங்களை இணைத்து கொள்ளிடம் ஆற்றில் திருமானூர் மேம்பாலம், 1969
2) குளித்தலை - முசிறி காவேரிப் மேம்பாலம், 1969
3) திருநெல்வேலியில் திருவள்ளுவர் பெயரில் ஓர் ஈரடுக்கு மேம்பாலம், 1970
4) கோவையில் ஓர் மூன்றடுக்கு மேம்பாலம், 1971
5) ஈரோடு சத்தியமங்கலம் சாலையில் ஓர் மேம்பாலம், 1972
6) ஒக்கேனக்கல் சாலையில் சின்னாற்றுக்கு குறுக்கே ஓர் மேம்பாலம், 1973
7) பொள்ளாச்சி தாராபுரம் சாலையில் ஓர் மேம்பாலம், 1973
8) தேவிப்பட்டினம் திருப்பாலக்குடி சாலையில் ஓர் மேம்பாலம், 1973
9) ராமநாதபுரம் பொய்யேரி செல்லும் சாலையில் ஓர் மேம்பாலம், 1973
10) முத்துப்பேட்டை - மீமிசல் சாலையில் அம்புலியாற்றின் மீது ஓர் மேம்பாலம், 1974

11) கல்லார் சிமெண்ட் பள்ளி சாலையில் அரசனூர் ஆற்றின் மீது ஓர் மேம்பாலம், 1973
12) உடுமலைப்பேட்டை-குமரலிங்கம் சாலையில் அமராவதி ஆற்றின் மீது ஓர் மேம்பாலம், 1973
13) செங்கல்பட்டு மாவட்டம் சூணாம்பேடு சாலையில் ஓர் மேம்பாலம், 1974
14) வேலூர் பாலாற்றில் போளூர் சுப்பிரமணியம் பெயரில் ஓர் மேம்பாலம், 1974
15) கடலூர் மாவட்டம் மலட்டாறு மீது ஓர் மேம்பாலம், 1974
16) கடலூர் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஓர் மேம்பாலம், 1975
17) மதுரை அண்ணா நகர் - காமராஜர் சாலை இணைப்பில் ஓர் மேம்பாலம், 1997
18) மதுரை மாவட்டம் மேலூர் பூவந்தி திருப்புவனம் சாலையில் ஓர் மேம்பாலம், 1997
19) மதுரா கோட்ஸ் புதிய சிறைச்சாலை அருகே ஓர் மேம்பாலம், 1999
20) மதுரையில் சுற்றுச்சாலையில் வைகை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம், 2000
21) மதுரை தென்காசி சாலையில் ஓர் மேம்பாலம், 1997
22) திருவாரூர் மாவட்டம் மயிலாடுதுறை -முத்துப்பேட்டை சாலையில் ஓர் மேம்பாலம், 2000
23) திருவள்ளூர் மாவட்டம் பெரியப்பாளையம் ஆரணி ஆற்றின் குறுக்கே ஓர் மேம்பாலம், 1999
24) திருவள்ளூர் மாவட்டம் தண்டலம் பேரம்பாக்கம் சாலையில் ஓர் மேம்பாலம், 2000
25) திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் பொன்னேரி சாலையில் நாப்பாளையம் உயர்மட்ட மேம்பாலம், 1999
26) ராமநாதபுரம் முதுகளத்தூர் சாலையில் ஓர் உயர்மட்ட மேம்பாலம், 2000
27) சிவகங்கை இளையான்குடி மறவமங்கலம் ஓர் உயர்மட்டமேம்பாலம், 2000
28) திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கொடநல்லூர் ஓசூர் சாலையில் உயர்மட்ட மேம்பாலம், 2000
29) திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் சாலையில் ஓர் உயர்மட்ட மேம்பாலம், 2000
30) திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஜமுனாமுத்தூர் ஆலங்காயம் சாலையில் ஓர் உயர்மட்ட மேம்பாலம், 2000
31) சென்னை ராயபுரம் சந்திப்பில் ஓர் உயர்மட்ட மேம்பாலம், 1999
32) கிண்டி ரயில்நிலையம் எதிரே புதிய உயர்மட்ட மேம்பாலம், 2000
33) திருச்சி தில்லைநகர் கரூர் புறவழிச்சாலை இணைப்பில் ஓர் உயர்மட்ட மேம்பாலம், 1999
34) திருச்சி நாமக்கல் சாலையில் உயர்மட்ட மேம்பாலம், 2000
35) திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே மதுரை கன்னியாகுமரி சாலையில் ஓர் மேம்பாலம், 1999
36) கோவை மாவட்டம் நொய்யல் ஆற்றின் குறுக்கே ஓர் மேம்பாலம், 1999
37) விழுப்புரம் மாவட்டம் வேட்டைக்காடு மேம்பாலம், 2000
38) விழுப்புரம் - சென்னை சாலையில் கீழ்பெரும்பாக்கத்தில் இருப்பு பாதைக்கு மேல் ஓர் மேம்பாலம், 2000
39) விருதுநகர் மாவட்டம் சிவகாசி - கழுகுமலை சாலையில் ஓர் மேம்பாலம், 2000
40) காஞ்சிபுரம் மாவட்டம் பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் ஓர் கீழ்பாலம், 1997
41) காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் தச்சூர் மேம்பாலம், 2000
42) தருமபுரி மாவட்டம் காவேரிபாட்டினம் மேம்பாலம், 2000
43) வேலூர் மாவட்டடம் அம்முண்டி சாலையில் ஓர் மேம்பாலம், 2000
44) புதுக்கோட்டை ஏம்பல் சாலையில் ஓர் விரிவாக்கப்பட்ட மேம்பாலம், 2000
45) கரூர் பள்ளப்பட்டு மண்மாரி சாலையில் ஓர் மேம்பாலம், 2000
46) சேலம் மாவட்டம் சேலம் புறவழிச்சாலையில் ஓர் மேம்பாலம், 2000
47) திண்டுக்கல் கோவை சாலையில் கோவைக்கு அருகே ஓர் மேம்பாலம், 2000
48) திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம், 1969
49) மதுரை திண்டுக்கல் புறவழிச்சாலையில் வைகை ஆற்றின் குறுக்கே ஓர் மேம்பாலம், 1971
50) மதுரை ஆண்டாள்புரம் முத்துராமலிங்கத் தேவர் மேம்பாலம், 1971
51) மதுரை மேயர் முத்து மேம்பாலம், 1971
52) திருவள்ளூர் மாவட்டம் காரனோடை குசத்தலை ஆற்றின் குறுக்கே ஓர் மேம்பாலம், 1972
53) தருமபுரி திருப்பத்தூர் சாலையில் தென்பெண்ணை ஆற்றில் இருமாத்தூர் மேம்பாலம், 1972
54) திருச்சி கரையாற்றின் குறுக்கே ஓர் மேம்பாலம், 1972
55) மதுரை அருப்புக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஓர் மேம்பாலம், 1972
56) கும்முடிப்பூண்டியில் ஆரணியாற்றின் குறுக்கே ஓர் மேம்பாலம், 1974
57) உளுந்தூர்பேட்டை கெடிலம் ஆற்றின் குறுக்கே ஓர் மேம்பாலம்,
58) திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் திருச்சி நெடுஞ்சாலையில் ஆற்றின் குறுக்கே ஓர் மேம்பாலம், 1974
59) திண்டுக்கல் வட்டாணம் சாலையில் ஓர் மேம்பாலம், 1974
60) விருதுநகர் கவுசிக ஆற்றின் குறுக்கே ஓர் மேம்பாலம், 1974
61) திருச்சி மாவட்டம் மணப்பாறை பனிச்சமேடு குழித்துறை ஆற்றுப்பாலம், 1975
62) மாமண்டூர் தாக்குப்பேட்டை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம், 1989
63) மாமண்டூர் கிள்ளியாற்றின் குறுக்கே ஓர் மேம்பாலம், 1989
64) செங்கல்பட்டு பாலாற்றின் குறுக்கே ஓர் மேம்பாலம், 1989
65) மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகி மாயூரம் சாரங்கபாணி மேம்பாலம், 1990
66) திருவாரூர் மேம்பாலம், 1990
67) கும்பகோணம் ரயில்வே மேம்பாலம், 1990
68) கோவையில் கிராஸ்கட் சாலையில் ஓர் மேம்பாலம், 1990
69) திருவண்ணாமலை மாவட்டம் ஆற்காடு விழுப்புரம் சாலையில் ஓர் மேம்பாலம், 1990
70) கோவை சத்தியமங்கலம் காமராஜ் நகர் மேம்பாலம், 1990
71) கோவை சிறுவானி சாலை மேம்பாலம், 1990
72) காஞ்சி மாவட்டம் வாயலூர் பாலாற்றின் குறுக்கே ஓர் மேம்பாலம், 1990
73) ஊட்டி கண்ணிக்கோடு கூடலூர் சாலையில் ஓர் பாலம், 1990
74) நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சாலையில் கோதையாற்றின் குறுக்கே ஓர் மேம்பாலம், 1990
75) விருதுநகர் மாவட்டம் சிவகாசி - விருதுநகர் சாலை மேம்பாலம், 1990
76) விழுப்புரம் கும்பகோணம் சாலையில் கடலூர் மேம்பாலம், 1990
77) திண்டுக்கல் சாரணப்பட்டி மேம்பாலம், 1990
78) ஆம்பூருக்கு அருகே பாலாற்றின் குறுக்கே ஓர் மேம்பாலம், 1990
79) பழனி தாராபுரம் சாலையில் மானூர் சண்முகாநதி குறுக்கே ஓர் மேம்பாலம், 1990
80) பெரம்பலூர் மாவட்டம் ஆலாத்துக்கரை கோலக்காநத்தம் சாலையில் ஓர் மேம்பாலம், 2000
படம் 1:
திருநெல்வேலி திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம்
படம் 2:
கோவை அவினாசி ரோடு மேம்பாலம்
#HBDKalaignar97

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக