புதன், 24 ஜூன், 2020

தமிழக போலீஸ் கூலிக்கு கொலை செய்யும் குண்டர்கள் ஆகிவிட்டனர்?


ஊரடங்கில் கடை திறந்தது குற்றமே
என்றாலும் கைது செய்து சிறையில் அடைப்பது என்கிற அளவுக்கு கொடுங்குற்றமா?
அதன் பொருட்டு இரு இறப்புகள்.
இங்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. குறுதொழில் செய்யும் எனது நண்பர்கள் சிலர் சொல்லும் செய்திகளைக் கேட்கும் பொழுது இந்த நெருக்கடியான கால கட்டத்தில் அதிகாரத்தின் விகாரமான முகம் மிகக் கோரமாக மாறி உள்ளதாகத் தெரிகிறது. ஊரடங்கின் போது தளர்வு அளிக்கப்பட்டுள்ளத் தொழில்களைச் செய்பவர்கள் பலரும் கடந்த இரு நாட்களாக பெரும் மன உளைச்சலில் இருப்பதாகத் தெரிகிறது. அவ்வாறான தொழில் புரியும் என் நீண்டகால நெருங்கிய நண்பர் ஒருவரை அழைத்த போது ஊரடங்கு முடியும் வரை அலுவலகத்தை மூடி விட்டதாகச் சொன்னார். ஏன் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் "பணம் கொடுத்து மாளவில்லை"
பொதுமக்கள்னா, எதுவா இருந்தாலும் ஸ்டேஷன்ல வந்து சொல்லு.. முதல்ல வண்டியில ஏறு...உடனே கைது, ரிமாண்ட், எதுவா இருந்தாலும் கோர்ட்ல பாத்துக்கோ.
அதுவே போலீஸ்னா, குறைந்தபட்சம், சஸ்பெண்ட், காத்திருப்போர் பட்டியல் கூட கிடையாது. ஒருவேளை ஐபிசி குற்றங்களிலிருந்து விலக்கு பெற்ற துறையா, காவல்துறை?


மறுபடியும் மறுபடியும் ஒரு கேள்வி தோன்றுகிறது. ஆயுதப்படை என்ன அவ்ளோ அவமானகரமான பிரிவா? குற்றச்சாட்டுக்கு ஆளானா உடனே ஆயுதப்படைக்கு மாற்றம்..

காவல்துறை தலைமை இனியாவது இந்த கேலிக் கூத்தை பற்றி சிந்திக்கவேண்டும். இதே காவல் துறைக்கு எத்தனையோ பேர் பெருமை சேர்ந்து விட்டு சென்றிருக்கின்றனர். அவர்கள் வரிசையில் சேரப்பாருங்கள்..
முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக