வெள்ளி, 8 மே, 2020

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம்

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம்மின்னம்பலம் : ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக்கைத் திறக்கக் கூடாது என்று வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், டாஸ்மாக் திறக்கத் தடையில்லை என தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒருவருக்கு ஒரு பாட்டில் மட்டுமே வழங்க வேண்டும், 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனைகளையும் விதிக்கப்பட்டது
இதனையடுத்து, சென்னையைத் தவிர்த்து மற்ற இடங்களில் நேற்று முதல் டாஸ்மாக் திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்றது. நேற்று ஒரே நாளில் 170 கோடி வரை மது விற்பனை மூலம் வருமானம் வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. எனினும் டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட சில தரப்புகளில் இருந்து இன்று (மே 8) வழக்கு தொடரப்பட்டது. அதில், “கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மது விற்பனையை தமிழக அரசு தொடங்கியுள்ளது சட்ட விரோதமானது. டாஸ்மாக் திறப்பிற்காக விதிக்கப்பட்ட நிபந்தனைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், டாஸ்மாக்கை திறக்க பிறப்பிக்கப்பட்ட ஆணையை ரத்து செய்ய வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டது.
இவ்வழக்ககு நீதிபதிகள் வினீத் கோத்தாரி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்படும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று உத்தரவிட்டனர். எனினும், மே 17 ஆம் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்யலாம் எனவும் அனுமதி வழங்கியுள்ளனர்.
எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக