ஞாயிறு, 31 மே, 2020

பெரியார் : தாயை காப்பாற்றுவதை போல நாம் திமுகவை காப்பாற்ற கடமை பட்டுள்ளோம்

சிவசங்கரன் சுந்தரராசன் :கலைஞர் குறித்தும் தி மு க குறித்தும் பெரியார் ! ; திராவிடர் இயக்க அரசியல் பிரிவான தி.மு.க குறித்து கலகக்காரர் தோழர் பெரியாரின் 1967 தொடங்கி 1974 முடிய பெரியாரின் மதிப்பீடுகள்:

*கருணாநிதி அவர்கள் இராசதந்திரம் மிக்கவர். இந்த நாடு சிக்கல் நிறைந்த நாடு. ஒழுக்கம், நாணயம், நேர்மை ஆகியவற்றை பற்றிக் கவலைப்படாத மக்களுள்ள நாடு. இந்த நாட்டில் மிகச் சிக்கலான பிரச்சனைகளை எல்லாம் மிக்க அறிவுத் திறன் காரணமாக தீர்த்து வருகிறார். - விடுதலை, 10.02.1971
*யார் ஆள்கிறார்கள் என்பதைவிட எப்படி ஆள்கிறார்கள் என்பதுதான் எனக்கு முக்கியம். சாதி ஒழிப்பு, பகுத்தறிவு, வகுப்புவாரி உரிமை ஆகிய எனது கொள்கைக்கு ஆதரவாகப் பகுத்தறிவுவாதிகளே (தி.மு.க) ஆட்சிக்கு வந்து, பதவிப் பிரமாணம் கூட இவர்கள் கடவுள் பேரால் செய்யாதது திருப்தி அளிக்கிறது. - விடுதலை, 15.09.1967
* ஜஸ்டிசு கட்சி கவிழ்ந்ததற்குக் காரணம் இன்றைய காங்கிரசார் போலவே தமிழர்கள், பார்ப்பன தாசர்கள் செய்த துரோகம் அல்லாமல் வேறு காரணம் ஒன்றுமில்லையே! இன்னும் சொல்கிறேன் கடுகளவு தமிழர் உணர்ச்சி பற்றுள்ள யாரும் இன்றைய (தி.மு.க) ஆட்சியை கவிழ்க்க நினைக்கவே மாட்டார்கள். - விடுதலை, 18.09.1967
*தாங்கள் பகுத்தறிவுவாதிகள்; கடவுள் நம்பிக்கை அற்றவர்கள்; தமிழர்களின் நலனில் அக்கறை உள்ளவர்கள் என்பதைத் தங்களின் செயல் மூலம் காட்டிக் கொண்டார்கள். எல்லா மந்திரிகளையும் தமிழர்களாக பார்த்துப் போட்டார்கள். உத்தியோகங்களைத் தமிழர்களுக்குக் கொடுத்தார்கள்.

*தண்ணீரில் தன் மகன் விழுந்து தத்தளிக்கும்போது, தன் மானத்தைப் பற்றிக் கவலையில்லாமல் தன் சீலையை அவிழ்த்து ஒரு முனையை வீசித் தண்ணீருக்குள் எறிந்து, தத்தளிக்கும் மகனை அந்த முனையை பிடித்து கொள்ளச் செய்து கரைக்கு இழுத்துக் காப்பாற்றும் தாயைப்போல் நாம் (தி.மு.க வை) காப்பாற்றக் கடமைப்பட்டிருக்கிறோம். - விடுதலை, 05.03.1968
*தி.மு.கழகமென்றால் பகுத்தறிவு இயக்கம் என்று பெயர். அதில் உள்ளவர்கள் யாவரும் பகுத்தறிவாதிகளாவார்கள். யாரோ சில பேர் பட்டை நாமம் போட்டுக் கொள்கிறவர்கள், கோயிலுக்குப் போகிறவர்கள் இருக்கலாம். அவர்கள் எல்லாம் பதவிக்காக – சுயநலம் – காரணமாகத் தி.மு.கழகத்திலிருப் பவர்களே தவிர கொள்கைக்காக இருப்பவர்கள் அல்ல. - விடுதலை, 05.01.1971
*திராவிட முன்னேற்றக் கழகம் என்பது சற்றேறக் குறைய இரண்டு, மூன்று ஆயிரம் ஆண்டுகளாக ஆரியர்களால் தாழ்த்தப்பட்டு, அடக்கப்பட்டுத் தலைநிமிராமல் அழுத்தி வைக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கென்றே தோற்றுவிக்கப்பட்ட கழகமாகும். - விடுதலை, 11.03.1971
*பொதுவாக சொல்லவேண்டுமானால் இந்தியாவிலே பார்ப்பனர் தவிர்த்த மற்றத் திராவிடர் சமுதாயத்திற்குச் சிறப்பாகச் சமூகத்துறையில் அரசியல் மூலம் தொண்டாற்றும் ஸ்தாபனம் திராவிட முன்னேற்ற கழகம் ஒன்றே ஒன்றுதான் என்று சொல்லும் படியான நிலையில் இருந்து வருகிறது. - விடுதலை, 11.03.1971
*தி.மு.கழக ஆட்சியின் மூலந்தான் தமிழன் தான் அடைய வேண்டிய பலனை அடைய முடியும். ஆகவே இந்த ஆட்சிக்கு ஆதரவாக இருந்து பாதுகாக்க வேண்டியது தமிழர் கடமையாகும்!. –- விடுதலை 19.02.1973

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக