ஞாயிறு, 31 மே, 2020

ஆரிய மாயை .. அவங்களுக்குத்தான் சங்கீதம் எழுத்து .... ..வரும்!

Shalin Maria Lawrence : முன்னாடி எல்லாம் netflix இருக்காது braodbaand
இன்டர்நெட் பலர் கிட்ட இருக்காது. நம்மள மாதிரி இணைய வசதி இருக்குறவங்க torrent போட்டு வித விதமா இங்கிலீஷ் படம் பாப்போம்.அதை பத்தி எழுதுறது ,பேசுறதுன்னு பெருசா சீன் போடுவோம்.இந்த உலகமே நம்மள அறிவாளி பிஸ்த்துன்னு நம்பும்.அப்படியே கெத்தா சுத்துவோம்... ஒரு போத...
திடீர்னு இணைய வசதி எல்லாருக்கும் கிடைக்குது... Netflix மாதிரி streaming சர்விஸ் எல்லாம் இந்தியாவுக்கு வருது .கொஞ்ச பேர் மட்டும் பாத்துட்டு இருந்த உலக படமெல்லாம் ஊரே பாக்குது. யாரெல்லாம் ஒன்னும் இல்லன்னு நெனச்சாங்களோ அவங்க எல்லாம் உலக படத்த பத்தி எல்லாம் விவாதிக்க ஆரம்பிக்கிறாங்க.அப்போ நமக்குள்ள ஒரு இனம் தெரியாத ஒரு வெறுப்பு வருது...எரிச்சல் ஆகுது...என்னடா நம்ம பேசுறத கேட்டவன் இப்போ இவன் பேசுறான்,அவன் பேசுறத கேக்க ஒரு நாலு பேரு. நமக்குள்ள பொங்கிட்டு வருது,நமக்கு இவ்வளவு நாள் கிடைச்ச அங்கீகாரம் எல்லாம்?இப்படி கண்டிப்பா பலருக்கு கண்டிப்பா தோனி இருக்கும்.
இப்படி ஒருத்தர் கிட்ட மட்டுமே இருக்குற வளங்கள் இன்னொருதருக்கும் கிடைப்பது தான் ஜனநாயகம்.நமக்கு கிடைச்ச வளம் இன்னொருதருக்கு கிடைக்க கூடாதுன்னு நெனைக்குறது பார்ப்பனியம்.
இந்த மாதிரி பல ஆண்டுகளாக ஒரு சமூகம் மட்டுமே வாய்ப்புகளையும் வளங்களையும் கைப்பற்றி வச்சுக்கிட்டு இருந்தபோது திடீர்னு ஜனநாயகம் வந்து எல்லோருக்கும் எல்லாம் கிடச்சு ,அவங்க முன்னேறி பேச எழுத ஆரம்பிச்சா இவங்களுக்கு வலிக்கும் தானே?எரிச்சல் வரும் தானே?
"இவ்ளோ நாள் நான்தான் அறிவாளின்னு ஊர் சொல்லிச்சே?!!

இவ்ளோ நாள் நாங்க மட்டும்தான் இது இதுல திறமைசாலின்னு ஊர நம்ப வச்சோமே ?!! இனிமே அதெல்லாம் ஓடஞ்சி போகுமே?! அப்புறம் இவங்கள வச்சி எப்படி பொழப்பு நடத்துறது?! " இப்படி எல்லாம் தோணும்.
குறிப்பா கல்வி ,கலை,இலக்கியம் இதெல்லாம். Intellectuality க்கு சம்பந்தபட்ட இடங்கள்ல இவங்க வர கூடாதுன்னு அந்த கும்பல் என்னென்ன பண்ணி இருக்கும்?
இப்படி எல்லா வளங்களும் எல்லோருக்கும் கிடைக்க தான் சமூக நீதி.அந்த வளங்கள் எல்லோருக்கும் சமமா கிடைக்க வாய்ப்புகளை வழங்குவது தான் இட ஒதுக்கீடு .அது வளங்களின் மறு,சம பங்கீடு.
ஆகவே எல்லோருக்கும் எல்லா வளங்களும் சமமாய் கிடைத்து அப்புறம் அதுல யார் பிஸ்த்து,ஜெத்துனு பாக்கணும்.
அத விட்டுட்டு ஒருத்தர் கிட்டயே வளங்களும் ,வாய்ப்புகளும் இருந்த காலத்துல வளர்ந்தவங்கா பார்த்து ஜீனியஸ் ,அறிவாளின்னு சொல்றது எவ்வளவு பெரிய அபத்தம்?
இத கணக்குல எடுத்துக்காம அவங்க பிறப்புலேயே அறிவாளி,அவங்களுக்கு தான் சங்கீதம் நல்லா வரும்,அவங்களுக்கு தான் எழுத்து வரும் அப்படின்னு பேசுறது எவ்வளவு பெரிய முட்டாளத்தனம்?
எல்லோருக்கும் சம வாய்ப்பும்,வளங்களும் குடுத்து போட்டி போட வச்சு அதுக்கு அப்புறமா தானே யாரு அறிவாளி பிஸ்த்துன்னு முடிவு பண்ண முடியும்?
இதை தடுக்க தானே டான்ஸ்ல இருந்து,இசைல இருந்து "எங்களுக்கு தான் வரும்,எங்களுக்கு தான் வரும்"ன்னு பத்மா சுப்ரமணியம் போன்ற லூசுகள் சொல்லிக்குறதும்.
இது மட்டுமில்ல அவங்க இல்லாத வேற யார் எந்த துறையில நல்லா விளங்கினாலும் அவங்கள கொள்கை ரீதியா இவங்கள்ள ஒருத்தரா மாத்த முயற்சி செய்றதும்,அது முடியாத மாத்திரத்தில அவங்கள "சீ இதெல்லாம் திறமையா" ன்னு கீழ தள்ளுறதும் காலம் காலமாக நடக்கும் விஷயங்கங்கள். சுத்தி யார் திறமைசாலி ன்னு இவங்க தான் முடிவு செய்யணும்னு நெனைப்பாங்க.
இந்த தந்திரத்த எல்லாம் புரிஞ்சி சுதாரிச்சிக்கணும்.இல்லனா காலம் பூரா பார்ப்பன அடிமையாகி சாகனும்.
PS :This is dedicated to one of my favorite writer in Tamil.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக