வியாழன், 28 மே, 2020

கொரோனா முகாமில் தலித் தொழிலாளர் சமைத்த உணவை மறுத்த பார்ப்பனர் .. ஜார்கண்ட்

Mirror now -ட. முத்துக்குமார்:
கொரானா வந்தாலும் சரி, கொத்து கொத்தாக செத்தாலும் சரி, இந்த தீண்டாமை மட்டும் ஒழியாது.
ஜார்க்கண்ட் மாநில ஹசாரிபாக் மாவட்டத்தில் ஒரு அரசு பள்ளியில் பல மாநிலங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இதில 5 பிராமணர்களும் அடக்கம்
இங்கு தங்கியுள்ளோர்களுக்கு தினமும் உணவு வழங்கப்பட்டது.
ஆனால் இந்த 5 பிராமணர்கள் மட்டும் வாங்கி சாப்புட மறுத்துள்ளனர்.
"தாழ்த்தப்பட்டவர்கள் சமைத்த உணவை நாங்க சாப்புட மாட்டோம்" என்று தங்களுக்கு தரும் சாப்பாட்டை சாப்பிட மறுத்துள்ளனர்..
இவர்களைத் தொடர்ந்து மேலும் பலர் சாப்பிட மறுத்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் பெரிய பிரச்சனையா எழ, கிராம தலைவர் அரசு அதிகாரிகளிடம் சொல்லி, அந்த 5 பேருக்கும் மட்டும் , தனியாக சமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
பின்னர், அந்த 5 பிராமணர்கள் வேறு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை ஹராசிபாக் மாவட்ட துணை ஆணையர் புவனேஷ் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்

கொரோனா நோய் பாதிப்பு அதிகமான காரணமாக அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இதற்க்கு புது விளக்கம் கொடுக்கிறார்.
அரசியல் சாசன சட்டத்திலேயே தீண்டாமை ஒரு பெரும் குற்றம் என இருக்கும் போது அரசு அதிகாரிகளே தீண்டாமையை கடைபிடிக்கின்றனர்.
தமிழ்நாட்டிலும் பகிரங்கமாக பிராமணர்களுக்கு அதிகமாக பரிவு காட்டப்படுகிறது.
கொரோனா நிவாரணமாக குடும்பத்துக்கு 1000 ரூபாய் கொடுக்கும் போது, எச். ராஜா பிராமணர்களுக்கு 10,000 ரூபாய் கேட்டான்.
மறுநாளே சிறப்பு பூசைக்கு அனுமதி என்று அறிவித்த எடப்பாடி அரசு கோவிலுக்குள்ளேயே நிவாரணத் தொகை கமுக்கமாக கொடுக்கப்பட்டது.
- Mirror now news - 25.05.2020
டக்லஸ் முத்துக்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக