வியாழன், 28 மே, 2020

அமெரிக்காவில் ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு .. கொரோனா பாதிப்பு

தினமலர்  : அமெரிக்காவில் கொரோனாவால் ஒரு லட்சம் பேர் உயிரிழந்திருப்பது சோகமான சாதனை என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில் வேதனையோடு தெரிவித்திருக்கிறார்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 58,22,571 ஆக உள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,58,126 ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றுக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,22,999 ஆக உள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.
அதாவது அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,02,197 ஆக அதிகரித்துள்ளது. > கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,47,781 ஆக உள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,90,356 ஆக உள்ளது. தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 11,55,238 ஆக உள்ளது. இதனைத்தொடர்ந்து ஸ்பெயின், பிரேசில், ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா, துருக்கி, ஈரான், சீனா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.


இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘கொரோனாவால் ஒரு லட்சம் பேரை இழந்திருக்கிறோம் என்ற சோகமான சாதனையை எட்டியுள்ளோம். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு என்னுடைய மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடவுள் எப்போதும் உங்களுடன் இருப்பாராக’’ எனப் பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக