புதன், 20 மே, 2020

‘பேருந்து போர்’- காங்கிரஸ் பேருந்துகளை நிறுத்திய உ.பி. அரசு.. பிரியங்கா காந்தி .. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு


hindutamil.in/  :புலம்பெயர் தொழிலாளர்களை முன் வைத்து மிகவும் கசப்பான ‘பேருந்து போர்’ நடைபெற்று வருகிறது. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்த பேருந்துகளை நொய்டாவின் செக்டார் 39 அருகே உ.பி.போலீசார் தடுத்து நிறுத்தி மேலும் செல்வதற்குத் தடை விதித்தனர்.
இது தொடர்பாக உ.பி. காங்கிரஸ் கமிட்டி நிர்வாகியும் முன்னாள் ஷாம்லி எம்.எல்.ஏ.வுமான பங்கஜ் மாலிக் கூறும்போது, “எங்கள் தலைவர் பிரியங்கா காந்தி 1000 பஸ்களை புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் பாஜக அரசு அரசியல் செய்கிறது, உதவுவதற்குப் பதிலாக இடையூறு செய்கிறது” என்றார்.
இதற்கிடையே பிரியங்கா காந்தியின் தனிப்பட்ட உதவியாளர் சந்தீப் சிங் உ.பி. அரசுக்கு கடிதம் எழுதி புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பேருந்துகள் அந்தந்த நுழைவாயில்களில் காத்திருக்கின்றன. அதிகாலை 4 மணி வரை உ.பி அரசு அனுமதிக்காகக் காத்திருக்கிறோம், என்று மின்னஞ்சல் செய்துள்ளார்.
உபி அரசு பேருந்துகளைநொய்டாவுக்கும் காஸியாபாத்துக்கும் கொண்டு செல்லக் கோரியுள்ளது.

”புலம்பெயர்ந்தோருக்கு உதவ நாங்கள் கடமை உணர்வுடன் இருக்கிறோம் உத்தரப் பிரதேச அரௌ நேர்மையாக இதை அணுகவேண்டும்” என்கிறார் சந்தீப் சிங். மேலும் உ.பி. போலீஸாரின் திமிர்த்தனத்தையும் அவர் விமர்சித்தார்.
மொத்தம் 1049 பேருந்துகளில் 879 பேருந்துகள் தகுதியானவை என்று உ.பி. அரசு கூறியுள்ளதாகவும் கட்சி மேலும் 200 பஸ்களை அளிக்கவுள்ளதாகவும் பிரியங்கா காந்தி செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்தார்.
மேலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான இந்தப் பேருந்தை அனுமதிப்பதில் தாமதம் செய்ய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பாக தொடர் ட்வீட்களில் பிரியங்கா காந்தி, “1049 பேருந்துகளில் 879 பேருந்துகள் முறையானவை என்று சரிபார்த்துக் கூறியுள்ளது. இருந்தும் உன்ச்சா நகாலா எல்லையில் 500 பேருந்துகள் காக்கவைக்கப்படுகின்றன, டெல்லி எல்லையில் 300 பஸ்கள் வந்துள்ளன. 879 பேருந்துகளையும் செல்ல அனுமதியுங்கள்.
புதனன்று மேலும் 200 பஸ்களின் பட்டியல்களை அளிக்கிறோம். இதையும் சரிபாருங்கள். மக்கள் பிரச்சினையிலும் துயரத்திலும் உள்ள்ளனர் நாம் மேன் மேலும் தாமதம் செய்ய முடியாது” என்றார் பிரியங்கா காந்தி.
ஒன்று உதவி செய்ய வேண்டும், இல்லையெனில் உதவுபவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என்பது அடிப்படையான அறம் என்று உத்தரப்பிரதேச சமூக செயல்பாட்டாளர்கள் இந்த விவகாரம் குறித்து தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக