சனி, 30 மே, 2020

கோவை கோயிலில் இறைச்சி வீசிய ராம் பிரகாஷ் சண்முகம் ஆர் எஸ் எஸ் சதி அம்பலம்

tamil.news18.com : கோவை வைசியாள் வீதியில் வேணுகோபால கிருஷ்ணசாமி கோவில் உள்ளது. இந்த நிலையில் நேற்றுக்காலை 10.30 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர், கோவில் வாசல் முன்னர் இறைச்சி இருந்த பிளாஸ்டிக் பையை வைத்துவிட்டுச் சென்றார். மேலும், அருகிலுள்ள ராகவேந்திர சுவாமிகள் கோவில் வாசல் முன்னரும் இதே போல பிளாஸ்டிக் கவரை வைத்து விட்டுச் சென்றார்
அங்கு பூக்கடை வைத்துள்ள பெண், பிளாஸ்டிக் கவரை எடுத்து பார்க்கவும், அதில் இறைச்சி இருக்கவே குரல் எழுப்பியுள்ளார். ஆனால், அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதனை அடுத்து போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில், கோவிலுக்கு வந்த போலீசார் இறைச்சியை எடுத்துச் சென்றனர். இதன் பின்னர், பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் காவல் நிலையம் முன் திரண்டனர்.
தீவிர விசாரணைக்குப் பின்னர், இறைச்சி வீசிய கவுண்டம் பாளையம் பிருந்தாவன் நகர் பகுதியில் வசிக்கும் சண்முகம் என்பவரின் மகன் ராம்பிரகாஷ் (48) என்பவர் கைது செய்யப்பட்டார். கைதான நபரிடம் போலீசார் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக கோவை மாநகர போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், கைதான நபர் எந்த ஒரு மத அமைப்பையோ, ஜாதி அமைப்பையோ சேர்ந்தவர் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப பிரச்னை காரணமாக மன அழுத்தத்தில் இருந்தவர் குற்றத்தை செய்ததாக விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் நடைபெற்ற உடன் 5 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டதால், தேவையற்ற பதட்டமான சூழல் தவிர்க்கப்பட்டது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்gjhg
:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக