சனி, 30 மே, 2020

டெல்லி மாஸ்கோ . பாதி வழியில் திரும்பிய விமானம் .பைலட்டுக்கு கொரோனா

விமானிக்கு கொரோனா : பாதியில்  திரும்பிய விமானம்மின்னம்பலம் : டெல்லியிலிருந்து மாஸ்கோவிற்கு சென்ற ஏர் இந்தியா விமானத்தின் பைலட் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் பாதி வழியிலேயே பயணத்தை ரத்து செய்துவிட்டு நாடு திரும்பியுள்ளது விமானம்.
விமானத்தை எடுப்பதற்கு முன்பு வெளிவந்த சோதனை முடிவில் தவறாக கொரோனா வைரஸ் நெகட்டிவ் என்று வந்திருக்கிறது. A320 விமானம் எந்த பயணிகளும் இல்லாமல், மாஸ்கோவிற்கு சென்று கொண்டிருந்தது.

"வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மாஸ்கோவில் இருந்து இந்தியா திரும்பும் பயணிகளை அழைத்து வருவதற்காக சென்ற விமானம், விமானிகளில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு பாசிட்டிவ் என சோதனை முடிவு வந்ததால், உஸ்பெகிஸ்தான் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்தபோது மீண்டும் திரும்ப அழைக்கப்பட்டுள்ளது" என்று ஏர் இந்தியாவின் மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார்.
"விமானம் உடனடியாக நாடு திரும்புவதற்கு உத்தரவிடப்பட்டது. மதியம் பன்னிரண்டு முப்பது மணிக்கு விமானம் டெல்லி திரும்பியது" என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
விமான குழுவினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மாஸ்கோவில் இருந்து இந்தியர்களை அழைத்து வர வேறு ஒரு விமானம் அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- பவித்ரா குமரேசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக