வெள்ளி, 15 மே, 2020

யாழ் உலக தமிழராச்சி மாநாடும் அரசியல் திருவிழாவும் .

அல்பிரட்துரையப்பா
திரு அல்பிரட் துரைப்பா அவர்கள் 
தனிப்பெரும் தலைவர் என்ற
அடைமொழியோடு அறியப்பட்ட ஜி ஜி பொன்னம்பலத்தையும் தமிழர்களின் ஒட்டு மொத்த பிரதிநிதிகள் என்று அறியப்பட்ட தமிழரசு கட்சியையும் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கி வெற்றி பெற்றவராகும்.
அதற்கு முக்கிய காரணாமாக கருதப்படுவது அவரின் மக்கள் நலம் சார்ந்த அணுகுமுறைதான்.
தமிழரசு கட்சி, தமிழ் காங்கிரஸ் கட்சிகளின்  தலைவர்கள் எல்லோருமே ஏறைக்குறைய கொழும்பு வாழ் தமிழ் மேட்டு குடிகள்தான்.
 தமிழ் தலைவர்கள் என்றால்  அவர்கள் ஏதோ வானத்தில் இருந்து வந்த தேவனின் புத்திரர்கள் என்ற ரீதியில்தான் நடந்து கொண்டார்கள்.
பண்டிதர் கா பொ.இரத்தினம்
தேர்தல் சமயத்தில் மட்டும் வந்து தமிழ் சிங்களம் போன்ற இரு சொற்களை மட்டுமே வைத்து அரசியலில் தொடர்ந்து வெற்றி பெற்று கொண்டே இருந்தார்கள்.
மறு புறத்தில் வேலை இல்லாத் திண்டாட்டம் கணக்கு வழக்கு இல்லாமல் எகிறி கொண்டிருந்தது.
இன்றும் கூட தமிழ் சிங்களம் என்ற இரண்டு சொற்களை மட்டுமே மூலதனமாக கொண்டு அரசியல் செய்யும் தமிழ் அரசியல்வாதிகள் அதே பார்முலாவில்தான் பயணிக்கிறார்கள். ஆனால் தற்போது மக்கள் கொஞ்சம் விழித்து கொண்டு விட்டார்கள்.
அன்றய வடக்கு தமிழ் அரசியல்வாதிகளில் அல்பிரட் துரையப்பாவுக்கு இருந்த தனிப்பட்ட செல்வாக்கு எந்த தமிழ் தலைவருக்கும் இருந்ததில்லை.
பெரிய தமிழ் தலைவர்களுக்கு எல்லாம் பெரிய கூட்டங்கள் இருந்தன . ஆனால் அவை வெறும் கும்பல்கள் என்ற ரீதியில் மட்டுமே இருந்தன.
ஏனெனில் அவர்கள் எல்லோருமே தமிழ் சிங்களம் என்ற இரு சொற்களை வைத்து அரசியல் செய்பவர்களாகும். 
இனவாதத்தை வளர்த்து அதில் மட்டுமே குளிர்காய்ந்து அரசியல் நடத்தியவர்கள் ஆரம்பத்தில் துரையப்பாவை அரசியல் ரீதியாக வீழ்த்தி விட முடியும் என்று கருதி கொண்டுதான் இருந்தார்கள் 
அவர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி வைத்தியம் நடந்தது 1970.   ஆம் ஆண்டு தேர்தலில்.


இருபெரும் கட்சிகளான தமிழரசு கட்சியும் தமிழ் காங்கிரஸ் கட்சியும் ஆறு தொகுதிகளில் அதிர்ச்சிகரமான தோல்விகளை சந்தித்தன.
இரு கட்சிகளையும் சேர்ந்த மிக முக்கிய தலைவர்கள் தோல்வி அடைந்தனர் .
இரு கட்சிகளும் ஒன்றோடு மோதிக்கொண்டு தோற்று போனவர்கள் பட்டியல் இதோ 
:1 - ஜி ஜி பொன்னம்பலம்  ( இவரின் பேரன்தான் இன்ற புலி ஆதரவு அரசியல்வாதி கஜேந்திரகுமார் போன்னம்லம்)
திரு அமிர்தலிங்கம்
திரு எம் சிவசிதம்பரம்
திரு தா.சிவசிதம்பரம் 
திரு .ஆலாலசுந்தரம் 
திரு .இ எம் வி .நாகநாதன் ( தந்தை செல்வநாயகத்தின் சம்பந்தி. சந்திரகாசனின் மருமகன்)  
இந்த தோல்விதான் தமிழரசு கட்சியின் புதிய அரசியல் பயணத்திற்கு காரணமானது.
இந்த சூழ்நிலையில் உலக தமிழராச்சி மன்றத்தில் பெரும் வலுவான குழுவாக இருந்தவர்கள் இலங்கை தமிழரசு கட்சியின் ஆதரவாளர்களும் அரசியல்வாதிகளும் ஒரு முக்கிய செய்தியாகும் 
குறிப்பாக உலக தமிழராய்ச்சி நிறுவனம் முதலில் மலேசியாவில்தான் உருவானது .
 அங்கு பணியில் இருந்த தனிநாயகம் அடிகளும் பண்டிதர் கா பொ இரத்தினமும் இது முக்கிய பங்காற்றி இருந்தார்கள். 
மலேயயா  பல்கலைக்கழகத்தில் தனிநாயகம் அடிகளாரோடு இணைந்து பணியாற்றினார் பண்டிதர் கா பொ இரத்தினம் அவர்கள். .

திரு பண்டிதர் கா பொ இரத்தினம் பின்பு தமிழரசு கட்சியின் எம்பியாக கிளிநொச்சி ஊர்காவல் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றார் .
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழர்ராய்சி மாநாட்டு நிகழ்வுகள் அனைத்தையும் தற்போது மீண்டும் ஒரு தடவை எண்ணிப்பார்க்கவும்.
மிக தெளிவாக புரியக்கூடிய அரசியல் கணக்குகள் இந்த யாழ்ப்பாண மாநாட்டில் தங்கி இருந்தது என்பது ஒரு பெரிய ரகசியமே அல்ல.
அன்றைய காலக்கட்டத்தில்  சரி எது பிழை எது என்று மக்கள் சிந்திக்க கூடியி நிலையல் இல்லை என்பது  கவனிக்க வேண்டிய விடயமாகும்.
இலங்கையில் சிங்கள இனவாதம் தலை தூக்கி ஆடிகொண்டு இருந்த காலக்கட்டம் அது.
மிக கவனமாக அரசியலை கையாள வேண்டிய முக்கிய சந்தர்ப்பத்தில் வெறும் தேர்தல்களில் வெற்றி பெறுவது ஒன்றே குறி என்று இலங்கை தமிழரசு கட்சி செயலாற்றியது. 
1970  தேர்தலில் இரு கட்சிகளுக்கும் பல தொகுதிகளில் மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்திலே வெற்றியும் தோல்வியும் தீர்மானிக்கப்பட்டது.
அந்த தேர்தலில் யாழ்ப்பாண தொகுதியில் வெறும் 56 வாக்குகளால் திரு அல்பிரட் துரையப்பா வெற்றி வாய்ப்பை இழந்தார் . 
அதில் வெற்றி பெற்றவர் பல தேர்தல்களின் தமிழரசு கட்சி சார்பாக போட்டி இட்டு தோற்றுகொண்டு இருந்த  சி எக்ஸ் மார்டின் ஆகும்.
இவர்  வெற்றி பெற்ற சில நாட்களிலே ஸ்ரீ மாவோ அம்மையாரோடு சேர்ந்து கொண்டார்.
திரு ஜி ஜிபோன்னம்பலமோ மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
யாழ்ப்பாண தமிழராய்ச்சி  மாநாட்டின் போது ஏற்பட்ட மக்கள் எழுச்சிதான் 
தமிழரசு தமிழ் காங்கிரஸ் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழர் விடுதலை கூட்டணியாக உருவெடுக்க முக்கிய காரணமாகும்.
இந்த இருபெரும் கட்சி தொண்டர்களின்  தமிழ் தேசியம் உணர்வுகள் மிகவும் உணர்சிகரமாக இருந்தது.
எதையும் சீர்தூக்கி பார்க்க கூடிய நிலையில் அன்று மக்கள் இருக்கவில்லை.
மக்களை அப்படி ஒரு நிலைக்கு தள்ளியதில் அமிர்தலிங்கத்தின் பங்கு அளப்பெரியது.
அவரின் மனைவி திருமதி மங்கையர்கரசி அமிர்தலிங்கம்  பேச தொடங்கினால் மக்களை கண்ணீர் விடும் அளவுக்கு பேசுவார் . மிக சிறந்த பேச்சாளர் . நல்ல இசைப்புலமையும் உள்ளவர் . சில மேடைகளில் உணர்ச்சி ஊட்டும் பாடல்களையும் பாடுவார்.
திரு அமிர்தலிங்கத்தின் பிபலமாக ஒரு இளைஞர் கூட்டத்தை அவர் கட்டி மேய்த்தார் . அதில் ஒருவர்தான் இன்றைய எம்பி மாவை சேனாதிராசாவும்.
குறிப்பாக பிரபகரனுகும் அமிர்தலிங்கத்துக்கும் இடையில் நல்ல தொடர்பு  இருந்தது.
அல்பிரட் துரையப்பாவின் கொலையில் அமிர்தலிங்கத்தின் மகனின் பங்கும் இருப்பதாக பலர் நம்புகிறார்கள்.
இப்படிப்பட்ட ஒரு உன்மத்த நிலைக்கு அன்றைய தமிழ் சமுகத்தை உருவாக்கி இருந்தார்கள் தமிழரசு கட்சியினர். முழுக்க முழுக்க தேர்தல் வெற்றிகளை மனதில் கொண்டே அதை அவர்கள் கட்டமைத்தர்கள்.
அவர்கள் தொகுதிகள் தோறும் பல இளைஞர்களை மூளை சலவை செய்வதில் வெற்றி பெற்றார்கள் .
துரையப்பாவை கொன்றபின் நடந்த தேர்தலில் இணைந்த தமிழரசு தமிழ் காங்கிரஸ் கட்சிகள் வரலாறு காணாத வெற்றிகளை அள்ளி குவித்தார்கள். அதன் காரணமாகவே அமிர்தலிங்கம் எதிர்கட்சி தலைவராக வர முடிந்தது.
துரைப்பா கொலையின் காரணமாக யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சியின்  இளம் நட்சத்திரம் என்று அறியப்பட்ட திரு யோகேஸ்வரன் பெருவெற்றி பெற்றார்  ( இவரும் புலிகளின் குண்டுகளுக்கு இரையானர்);  -கலாநிதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக