வெள்ளி, 15 மே, 2020

உதய நிதி தன் பேச்சில் திராவிட கொள்கையை . .... தேவி சோமசுந்தரம்

Devi Somasundaram : நேற்று முழுக்க தயானிதி என்ன தகுதில கட்சிக்கு
வந்தார்ன்னு ஸ்ரீலஸ்ரீ சுத்த வடகலை ஐயங்கார் நீளமா எதும் எழுதுவார்ன்னு வெய்ட் செய்தேன்...எதும் இல்லை ..
என்ன காரணம்? ...தயானிதி எதிர்க்க பட அவர் வாரிசுன்ற தகுதி தேவை இல்லைன்னு நினைச்சாரா ? .அல்லது தயானிதி  கருத்தும் வடகலையார் கருத்தும் ஒன்னு தான் என்பதால் எதிர்க்கலயா ? .
நேர்மையான விமர்சனம் செய்பவர், மக்கள் நலன் விரும்பி என்றால் நேற்று தயானிதி என்ன தகுதியில் அரசியலுக்கு வந்தார்ன்னு எழுதி இருக்கனும்..அப்படி எதும் எழுத வில்லை .
ஆனா உதய் நிதி ஏன் கட்சிக்கு வந்தார்ன்னு மட்டும் நாப்பது பக்கம் எழுதுகிறார்கள் ..
ஒரு தேர்ந்தெடுக்கபட்ட எம் பி யின் , கட்சியில் முக்கிய பொருப்பில் இருக்கும் தயானிதியை விட உதய நிதி எதிர்ப்பு ஏன் செய்யப்படுகிறது .?
ஏன் என்றால் தயானிதியால் ஆரிய கொள்கைக்கு ஆபத்து வந்து விட போவதில்லை .. ஒரு இயக்கத்தின் கொள்கையை வலிமையா கட்டிகாக்கும் தகுதியை அவர் ஒரு நாளும் பெறப்போவதில்லை..
ஆனால் உதய நிதி அப்படி அவர்கள் பார்வைக்கு தெரியவில்லை .உதயநிதி தினம் மக்களோடு மக்களாய் நிற்கிறார்.. தெருவில் இறஙகி மக்கள் தேவைக்கு பாடுபடுகிறார்..

தன் செயலில், பேச்சில் திராவிட கொள்கையை கடைபிடிக்கின்றார் . கடலூர்ல விசிக கொடி ரவுடிகளால் அறுக்கப்பட்ட போது விசிக கொடியை தன் கைகளில் ஏந்தி தான் கட்சிக்கு அப்பாற்பட்ட பொது சமூக வாதி என்பதை அழுத்தமா பதிய வைத்தார் ...
கலைஞருக்கு பின் திமுக அழிந்து விடும் என்று கற்பனை கோட்டை கட்டியவர்கள் தலையில் இடியாய் விழுந்தது ஸ்டாலினின் அபார செயல்பாடும் அவர் இனத்தை ஒன்று படுத்தி பெற்ற மாபெரும் வெற்றியும்..
அதை இனி உடைக்க முடியாது என்பது அவர்களுக்கு விளஙகி விட்டது ..
ஸ்டாலினுக்கு பின் இய்க்கத்தை உடைக்க எதும் சந்தர்ப்பம் கிடைக்குமா என்பது அவர்கள் தேடல் .அதில் உதய நிதி அவர்களுககு வாய்ப்பை தர மாட்டாரோ என்று பதறுகிறார்கள் ..
அந்த அடிப்படை காரணம் தான் உதய நிதி மீதான இந்த இணைய தாக்குதல். .அதனால் தான் உதயனிதி பேசும் கொள்கையை விமர்சிக்க முடியாமல் நயன் தாராவை எல்லாம் தங்கள் "கொள்கை" அரசியலுக்கு இழுத்து கொள்கிறார்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக