புதன், 13 மே, 2020

உதயநிதியை ஏன் குறிவைத்து தாக்குகிறார்கள்? சமுக வலையில் காரசார விவாதம்

இவர்கள் எல்லாம் உதயநிதியை குறிவைத்து தாக்குவதில் இன்னும் எனக்கு
தெரியாத ஏதோவொரு விடயம் மறைந்திருக்கிறது போல தோன்றுகிறது.
வெறும் வாருசு என்பதை தாண்டி இவர்களின் குறிக்கு வேறு ஒரு காரணம் இருக்கவேண்டும் என்று கருதுகிறேன்.
ஏனெனில் இதே போன்றதொரு குற்றச்சாட்டுதான் ஸ்டாலின் மீதும் காலம் காலமாக வைக்கப்பட்டது.
இத்தனையும் ஸ்டாலினை அரசியலுக்கு கொண்டுவந்தது எமர்ஜென்சியின் தமிழக வைஸ்ராயாக இருந்து செயல்பட்ட மூப்பனார் போன்ற தமிழக  காங்கிரஸ் கூட்டம்தான்.
எந்த காரணமும் இல்லாமல் ஸ்டாலினையும் சிறையில் தள்ளி அடித்து துவம்சம் பண்ணி அவரை அரசியலுக்குள் தள்ளி விட்டார்கள்.
ஆம் அரசியலுக்குள் அவர் பலவந்தமாக தள்ளி விடப்பட்டார் .
அதன் பின் ஒவ்வொரு கட்டத்திலும் அவரை கலைஞரோடு ஒப்பிட்டு அவமானப்படுத்துவதிலேயே திமுக எதிரிகள் குறியாக இருந்தனர்.
அதிலும் புலிவாலுகளுக்கு தங்களின் போராட்ட கனவெல்லாம் கனவாகவே போனதற்கும் ஸ்டாலின்தான் காரணம் என்பது போல இன்றுவரை ஆர் எஸ் எஸ் இன் மீம்ஸ்களையும் போலி செய்திகளையும் பரப்பி கொண்டிருக்கிறார்கள்.
இவற்றிக்கு எல்லாம் உண்மையில் என்னதான் காரணம்?
திராவிட கருத்தியல் மீதான வெறுப்புத்தான் இதன் உள்ளிருப்பு. .
சக மனிதரை ஒரு போதும் சக மனிதராக கருதுவதை விரும்பாதவர்கள்.
தங்களின் அந்தஸ்த்துக்கு  அல்லது தங்களின் சமுக அடையாளத்துக்கு ஏற்றதல்ல என்ற திருட்டு கருத்தில் ஆழமாக ஊறி இருப்பவர்களாகும் .
அந்த திராவிட கருத்தியலை அரசியல் அரங்கில் கட்டமைத்தை ஒரே கட்சி திராவிட முன்னேற்ற கழகம்தான்.

 ஆரிய  பார்பன ஜாதீய கருத்துக்களின் அடிப்படையில் தங்கள் உளவியலை கொண்டிருப்போர்கள் தங்களின் முழு முதல்  எதிரியாக திமுகவைத்தான் கருதுகிறார்கள்.
அவர்கள்தான் தற்போது உதயநிதியை துவம்சம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
எந்த தனி மனிதர்களையும் விட திமுக என்ற அமைப்பு பெரிது . ஒரே அமைப்புக்குள் உள்ள மாறுபட்ட கருத்துக்கள் எல்லாம் அந்த அமைப்பின் ஜனநாயக பண்புக்கு வலு சேர்ப்பவை ஆகும்.
அரசியல் கட்சி என்பது வெறும் ஆதரவாளர்களை மட்டும் கொண்டதல்ல.
அது ஒரு நிறுவனமும் கூட.
அதன் அடிப்படை நோக்கம் அதன்  கருத்தியல்தான் .
அந்த அமைப்பின் பொறுப்புக்களுக்கு யார் யார் வருகிறார்கள் என்பது மட்டுமல்ல யார் யாருக்கெல்லாம் அங்கு மதிப்பு கூடுகிறது அல்லது குறைகிறது என்பதெல்லாம் கூட ஓரளவு அந்த கட்சி சார்ந்த விடயம்தான்.
அந்த கட்சியின் ஆதாரமான கருத்தியலுக்கு அதில் உள்ள ஒருவர் மாறாக நடந்து கொண்டால் அதை நோக்கிய விமர்சனன்ங்களில் ஒரு தார்மீக வலு இருக்கும்.
அந்த வகையில்  இது வரை உதயநிதி திராவிட கருத்தியலுக்கு உற்றவராகத்தான் தெரிகிறார்.
அதைதான் அவரை குறிவைத்து தாக்குவோர்களும்  எனக்கு மறைமுகமாக கூறுகிறார்கள் ( ஆசிரியர் கருத்து)

Narain Rajagopalan : "வாரிசு அரசியலை” நான் ஆதரித்து எழுதிய கட்டுரையை உதய் ரசிக குஞ்சுகள் (அதில் என் நண்பர் அப்துல்லா வேறு இருந்து தொலைக்கிறார்) எடுத்து வைத்து கொண்டு, நான் தடம் மாறி விட்டேன், நான் இன்னொரு கிஷோர் கே சுவாமி என்று ஏதோ சொல்லி கொண்டு இருக்கிறார்கள். இதை தான் Sycophancy என்று திரும்ப திரும்ப சொல்கிறேன். இந்த ஆராதனை மனோபாவத்திலிருந்து வெளியேறுவது தான் திராவிட இயக்க ஆதாரத்திற்கு போவது. ஆனால் அது உங்களுக்கு புரிபடாது.
இன்றளவும் நான் சொல்வது “வாரிசு அரசியலை” தடுக்க முடியாது. அது வந்தே தீரும். அதை மக்கள் எப்படி ஏற்று கொள்கிறார்கள் என்பதை பொறுத்து தான் சினிமாவிலும் / அரசியலிலும் வாரிசுகள் இயங்குவார்கள். இது தான் சாரம்சம்.
திரு. உதயநிதி ஸ்டாலினை பொறுத்தவரை என்னுடைய கேள்விகள் மிக எளிமையானது.
ஸ்டாலின் மகன் என்பதை தவிர என்ன தகுதி உதய்க்கு இருக்கிறது ?
அப்படியே அது மட்டுமே தகுதி தான் என்றாலும், எதற்கு இத்தனை அவசரம் ?
அப்படியே அவர் வர வேண்டுமென்றாலும், அவர் எத்தனை ஆண்டுகள் கட்சிக்காக உழைத்திருக்கிறார் ?
இதில் எந்த கேள்விக்கும் பதில் வராது என்று எனக்கு தெரியும். ஸ்டாலினையும், கனிமொழியையும் ஏற்று கொண்ட எங்களால், உதய்யையும் ஏற்று கொள்ள முடியும், provided if he is on the ground and worked from bottom to the top. Not, dropped from an helicopter to the top most post. இந்த கேள்விகளைக் கேட்டால் உடனே நான் கருத்தியல் மாற்றத்தில் இருக்கிறேன் என்கிறீர்கள்.
சரி ஒரு வாதத்துக்கு நான் அன்றைக்கு ஆதரித்தேன், இன்றைக்கு எதிர்க்கிறேன் என்றே வைத்து கொள்வோம். அதனால் என்னுடைய நடத்தையை பற்றிய கேள்விகள் பேச படுகின்றன. மிஞ்சி மிஞ்சி போனால் நீங்கள் இறுதியாக சொல்ல போவது பார்ப்பன தேவுடியா பயலே, இவ்வளவு தானே.
2016-இல் ஆட்சியே ம.ந.கூ-வால் தான் போனது என்று அரற்றி விட்டு, இன்றைக்கு “கட்டு விரியன், கண்ணாடி விரியன்” என்று சொன்ன திருமாவுடனும், அதை ஒருங்கிணைத்த வை.கோவிற்கு ராஜ்ய சபா இருக்கையும், அன்றைக்கு போன இடங்களில் எல்லாம் அதிமுகவும், திமுகவும் விஷ கிருமிகள் என்று சொன்ன இடதுசாரிகளோடும் கொஞ்சி குலவி 38 இருக்கைகளை வென்று, ஆனால் தமிழ்நாட்டில் துரோகி என்று சொல்லப்பட்ட எடப்பாடியை கூட எதிர்த்து வெல்ல முடியாமல், பம்மி கொண்டு இருக்கும் நீங்கள் யார்?
நான் கருத்தியல் மாற்ற பொறம் போக்குன்னா, நீங்க உங்களை அவமானப் படுத்திய, ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்தாக சொல்லப்படும் ஆட்களோடே படுத்து புரள்கிறீர்களே. இதுல யார் மோசமான .........
கருத்து மாறியதால், நான் பா.தே.ப, அப்ப நீங்க?

Devi Somasundaram : சோ இப்ப நீங்க பாப்பனர்ன்றத அடையாளப் படுத்திகனும்....அதான....இதை சொல்ட்டு போய் இருக்கலாமே ...அதுக்கு ஏன் உதய நிதி யார் ரசிக்கனும் கூடாதுன்னுலாம் மொழ நீளம் சீமான் தமிழினத்துக்கு செய்த தியாகத்துகாக நீங்க கொண்டாடற பகுத்தறிவுக்கு நான் வேணா தலை வணங்கவா ... ஒரு அணித்தலைவர் தன் வேலைகள ஒருங்கிணைக்க அந்த அந்த ஊர் கட்சி பிரமுகரை சந்திப்பது ஒரு சாதாரண விஷயம்.... உதய் நிதி ஒண்றிணைவோம் வா மூலம் மக்கள் கிட்ட போய் பேசறார் ..உதவி செய்றார் . அதை பாராட்ட மனசு இல்லன்னா பரவால்ல...எப்பவோ நடந்த நிகழ்வ் இப்ப பேசிசுய ஆர்கஸம் செய்துக்றது மக்கள் நலன்னு தான் எடுத்த்துகனும்.... உங்க இனப் பற்றுல் புல்லரிகிது போங்க . @குகனாரென்ஸ் ..என்ன பேர் இது Win Churchill : ஜெயலலிதா எந்த bottom to top வரை உழைத்து மேலே வந்தார்?? ஓ அவர் பாப்பாத்தியா... ஸாரி... தெரியாம கேட்டுட்டேன்.

 Nilavinian Manickam : வாரிசு அரசியல்னு வந்துட்டாலே இதுதான் தகுதி.. அதை நீங்க அரசியலில் உள்ள அனைவருக்கும் பொருத்திப் பாருங்கன்னு சொல்றோம்.. திமுகவை இழிவுபடுத்தி தரம் தாழ்த்தும் நோக்கில் மட்டுமே அதை கருத்தாக எழுதாதீங்கன்னுதானே சொல்றோம்.

. Niyamath Ali : ஐயோ சகோ விடுங்கள்.எவனாவது எதையாவது பதிவு போட்டால் திமுக தலைமை எப்படி பொறுப்பேற்கும்.தகுதியற்ற மத்திய மாநில அரசுகளை எதிர்க்கும் போரில் இப்படி ஒரு கருத்தியலை உருவாக்கி திமுக அணியை பலவீனப்படுத்த நீங்களும் ஒரு கருவியாக இருக்க வேண்டாம்.

G. Arivalagan : உதயநிதி தன்னை எங்குமே முன் நிறுத்தவில்லை. உங்களை போன்ற ஆட்கள் வேலை வெட்டி இல்லாமல் திமுகவை சொரிந்து பயன்பெறுகிறீர்கள். போகட்டும். "இந்த மனநிலையைத் தான் நான் சொல்கிறேன்" நீங்கள் உங்கள் மேதாவித்தனத்தை இங்கு காட்ட வேண்டாம். திமுகவிற்கு என ஒரு தனித்துவம் உண்டு. அதன் தொண்டன் அருகில் எல்லாம் நிற்கும் தகுதி கூட உமக்கு இல்லை.உதயின் தகுதியை அவர் நிலை நிறுத்துவார் .நீங்கள் உங்கள் வேலையை பார்க்கலாம்

Devi Somasundaram : இவர்கள் அடிச்சு அடிச்சே அவர வளர்த்து விடறாங்க ...இதுல நாங்க உத்ய நிதி சொம்பாம்.

 Rajendra Selvaraj :நான் பாப்பாத்திதான்... நான் பாப்பாத்திதான்... என்று ஜெயலலிதா அன்றொரு நாள் சட்டமன்றத்தில் முழங்கியது நினைவுக்கு வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக