புதன், 6 மே, 2020

ஷார்ஜாவில் 47 மாடி கட்டிடத்தில் தீவிபத்து . ..இந்தியர்கள் அதிகம் வசிக்கும் மாடி .

Mathivanan Maran   - /tamil.oneindia.com/n  :  ஷார்ஜா: ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜாவில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் 47 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அதில் குடியிருந்த 300 குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளன
 ஷார்ஜாவின் Al Nahda பகுதியில் அமைந்திருக்கும் Abbco Tower 47 மாடிகளைக் கொண்டது. தாஜ் பெங்களூரு ரெஸ்டாரண்ட்டுக்கு அடுத்ததாக இந்த 47 மாடி கட்டிடம் உள்ளது. இங்கு இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.
 இந்த 47 மாடி கட்டிடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இதனையடுத்து மினா தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர். மேலும் இந்த 47 மாடி கட்டிடத்தில் இருந்து 300க்கும் அதிகமான குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டன. இதில் 9 பேருக்கு மட்டும் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக