வியாழன், 9 ஏப்ரல், 2020

Trance நவீன மத வியாபார மோசடிகளை இதை விட தெளிவாக காட்டி விட முடியமா? full movie


பெரியார் நேசன் : கன்னியாகுமரியில் half time motivationall பேச்சாளராகவும் ..half time chefஆகவும்
வாழ்க்கை வண்டியை ஓட்டும் பஹத் பாசில், மனநலன் பாதிக்கப்பட்டட தன் தம்பியின் மரணத்திற்கு பிறகு அங்கே வாழப்பிடிக்காமல் மும்பை வருகிறார். மும்பையில் அறிமுகமாகும் கௌதம் மேனன் மற்றும் செம்பான் வினோத் இருவரும் பஹத் பாசிலை மேடை பிரசங்கம் செய்யும் ஒரு பாதிரியாராக மாற்றுகின்றனர். இவருக்கு பயிற்சி அளிக்கிறார் பயிற்சியாளர் திலீஷ் போத்தன்.. மதத்தின் பெயரை வைத்து கோடிகளில் சம்பாதிப்பது தான் கௌதம் மேனனின் திட்டம். மதம்தான் மனிதர்களின் மிகப்பெரிய போதை அந்த போதையை கொடுத்து நாம் பணம் சம்பாதிக்க போகின்றோம் என கெளதம் விளக்கும் இடம் நிதர்சனம்..
ஆறு மாத பயிற்சிக்கு பின்பு போலி மத போதகராக மேடை பிரசங்கங்கம் செய்கின்றார் பஹத் பாசில்..கடவுள் அருளால் அற்புதம் நிகழ்கிறது என மேடையிலேயே பலர் முன்னிலையில் சிலரின் நோய்களை குணமாக்கும் நாடகம் நிகழ்த்தப்படுகின்றது அதை நம்பும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து சேர்ந்து பணத்தை கொட்டுகின்றனர் அதே போல் மற்றொரு பக்கம் ஒரு கட்டத்தில் பஹத் பாசிலின் புகழ் அதிகமாக, கௌதம் மேனனின் கட்டுப்பாடுகளை மீறி, தன்னிச்சையாக செயல்பட நினைக்கும் பஹத் செயலால் கெளதம்மிற்கும் இருவருக்கும் நடக்கும் பிரச்சனையில் மீண்டாரா..


இவரின் போதனைகளை நம்பி ஜெப தைலம் மட்டுமே பயன் படுத்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் இறந்த குழந்தையின் தகப்பனிடம் மன்னிப்பு கேக்கும் பகத் போலி மத போதனையை கைவிட்டாரா..கொஞ்ச காட்சிகளிலேயே வரும் நஷ்ரியாவை கரம் பிடித்தாரா என்பதே கதை...
நவீன காலங்களில் நடக்கும் போலி மத போதனைகளை தோல் உரித்து காட்டியிருப்பது விரும்பத்தக்க நிகழ்வு.. மத நம்பிக்கையில் இருக்கும் மக்கள் எந்த இடத்தில் மூட நம்பிக்கைக்குள் உள் நுழைகின்றனர் என்பதை சரியாக காட்டியுள்ளனர்.. தமிழில் இது போன்ற படங்கள் வர வாய்ப்பே இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக