சனி, 18 ஏப்ரல், 2020

Serum Institute of India கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியிருப்பதாகத் தெரிவிக்கிறது

india may get a viable Covid-19 vaccine by the second quarter of 2022, ahead of the original estimated timeline of late 2022, says Adar Poonawalla, chief executive officer of Serum Institute of India (SII), the world’s largest manufacturer of vaccines by number of does produced
Kumaresan Asak: புனே நகரில் இயங்கிவரும் குருதி ஊனீர் நிறுவனம் (Serum Institute of India) கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியிருப்பதாகத் தெரிவிக்கிறது. சோதனைக் கூட விலங்குகளின் உடலில் செலுத்திப் பார்க்கும் சோதனைகள் தொடங்கிவிட்டதாகவும், 2021க்குள் மருந்து தயாராகிவிடும் என்றும் கூறுகிறார் இந்தத் தனியார் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆடார் புனாவாலா. “இதற்கு நாங்கள் காப்புரிமை பெறப்போவதில்லை. எங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்குத் தயாரித்து விநியோகிப்போம்,” என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.
குஜராத் உயிரித்தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் (Gujarat Biotechnology Research Centre - GBRC) அறிவியலாளர்கள் கொரோனா மரபணுப் பின்னலமைப்பைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட திசுக்களை மரபணுப் பின்னல் ஆய்வுக்கு உட்படுத்தி இதைச் சாதித்திருக்கிறார்கள் இந்த அரசுத்துறை மையத்தின் வல்லுநர்கள். சிகிச்சை, தடுப்பு இரண்டுக்குமான மருந்துகளைக் கண்டுபிடிப்பதை நோக்கிச் செல்வதில் இது ஒரு முக்கியமான அடிவைப்பு.

மற்றுமோர் அரசு நிறுவனமான இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் (Indian Council of Medical Research - ICMR) இரண்டு இந்திய வகை வௌவால் இனங்களின் உடலில் கொரோனா நுண்ணுயிரி இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது. நோயை முறியடிக்க அது எப்படிப் பரவுகிறது என்பதை அறிவது முக்கியம். அதற்கு வௌவால்கள் கண்காணிப்பு பேருதவியாக இருக்கும்.
வேறு பல நாடுகளிலும் கொரோனா ஆராய்ச்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. நம்பிக்கையளிக்கும் இப்படிப்பட்ட முயற்சிகள் பற்றிய செய்திகள் வந்துகொண்டிருக்கும்போதுதான் உலக சுகாதார நிறுவனத்திற்கு (WHO) இனி அமெரிக்காவின் பங்கு நிதி கிடையாது என்று டிரம்ப் அறிவித்த செய்தியும் வந்திருக்கிறது. WHO அங்கீகாரத்துடன் கொரோனா மருந்து வெற்றிகரமாகக் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால் அது அமெரிக்காவுக்குள் வரக்கூடாது என்று ஆணையிடுவாரா என்ன?
உலக மக்களுக்கு, தனது நாட்டு மக்களுக்குமே கூட அபாயகரமானதாகிய இந்த முடிவை டிரம்ப் எடுத்திருப்பதற்கு எழுந்துள்ள எதிர்ப்பு முற்றிலும் நியாயமானது. இங்கே கொரோனா பரவல் தடுப்புப் பணிகளில் மிகுந்த முனைப்புக் காட்ட வேண்டியிருப்பது உண்மைதான் என்றாலும், அமெரிக்க அரசின் இந்த முடிவை இந்திய அரசு விமர்சித்தாக வேண்டும் – உலக மக்களுக்காகவும், இந்திய மக்களுக்காகவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக