சனி, 11 ஏப்ரல், 2020

இந்தியாவின் மிகப்பெரிய சவால் .. முன்னாள் மத்திய வங்கி(RBI) ஆளுநர் ரகுராம் ராஜன் பேட்டி .. India's Greatest Challenge in Recent Times"

Perhaps  India's Greatest Challenge in Recent Times"
Muralidharan Pb : முன்னாள் இந்திய மத்திய வங்கி(RBI) ஆளுநர் ரகுராம் ராஜனின் பேட்டியை நண்பர் அனுப்பி இருந்தார்.
பொருளாதார வல்லுநர் ரகுராம் ராஜன், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் இன்று கொரோனா தாக்குதலில் இருந்து வருங்காலங்களில் வரப்போகும முன்னேற்பாடுகளில், கொள்கை சிக்கல்கள் மற்றும் விதிவிலக்குகளுக்குட்படாத சவால்களை கண்டறிய ஐஎம்எப்(IMF) அமைத்த குழுவில் உள்ள 11 பேரில் ரகுராம் ராஜன் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. திறமைகளை நம்மைக் காட்டிலும் வெளிநாட்டுக்காரன் நன்றாகவே உணர்ந்துள்ளான்.
இருப்பினும் ரகுராம் ராஜன், நான் இந்திய அரசு கேட்டுக்கொண்டால் உதவிட தயாராக இருக்கிறேன் என்று நேரடியாக கூறியுள்ளார். ஒரு ஊடகத்தின் பேட்டியில் பல விவரங்களை அவர் மேற்கோள் காட்டி பேசியுள்ளார். அதன் சுருக்கம்.
200 க்கும் மேற்பட்ட உயிர்களை குடித்த கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட பொருளாதார அழுத்தத்தை உணர்கிறேன், அரசு அழைத்தால் வைரஸ் ஏற்படுத்தக்கூடிய பொருளாதார நெருக்கடியால் ஏற்படப்போகும் பின்னடைவில் இருந்து வெளியேற நான் நமது அரசுக்கு உதவத் தயார்.
தற்போதைய பொருளாதார பின்னடைவை விட மிக மோசமான பின்னடைவை நாடு சந்திக்க உள்ளது என்பதை குறிப்பிடுகிறார். பொருளாதாரம் இதனால் ஓராண்டு கழித்து தான் மீளும் என்று நம்புகிறார். குறிப்பாக அந்நிய செலாவணி தான் பெரிய நெருக்கடிக்குள்ளாக்கப் போகிறது. ஆனால் ஆர்பிஐயின் முயற்சியால் நாம் பாதுகாப்பாகவே இருக்கிறோம். குறைந்த அளவிலே சேதாரம் ஏற்பட்டுள்ளது ஆனால் நம்மை போல வளரும் நாடான பிரேசில் 25% மேல் சென்றுவிட்டது. நாம் அவர்களை விட மேலாகவே இருக்கிறோம்.

இந்திய அரசுக்கு ஆலோசனையாக, இதுவரை இந்த மாதிரி சரிவு நிலையில் உள்ளபோது மீட்டெடுத்த திறமையானவர்களை, துறை வல்லுநர்களை அவர்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அவர்களை அழைத்து பொருளாதாரத்தை மேம்படுத்த என்ன செய்யலாம் என கேட்கலாம். 1947க்கு பிறகு நாடு சந்தித்திருக்கும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியாக இதைக் காண்கிறேன்.
எல்லாமே பிரதமர் அலுவலகம் பார்த்துக்கொள்ளட்டும் என்றால் அது நிறைவேறாத ஒரு இலக்கு என எச்சரிக்கிறார். ஏற்கனவே அங்கு பணிகள் தேங்கி உள்ளது. ஆகவே நமது நாட்டிலே உள்ள பல பொருளாதாரத் துறை வல்லுநர்களை, சான்றோர்களை துணைக்கு அழைத்து அவர்களுக்கு பொறுப்பு ஒதுக்கி தீர்வு காண்பதே சரியான வழியாக கருதுகிறேன்.
குறிப்பாக, "எல்லாவற்றையும் பிஎம்ஒ தான் முடிவெடுக்குமெனில், அது கால தாமதமாகவும், மிக குறைந்த பலனை கொடுக்கும்"
2008-09 பெரியதொரு பொருளாதர பின்னடைவு பேரதிர்ச்சி அலையை உலகெங்கும் உருவாக்கிய போது, நமது நாட்டில் அன்றாடம் வேலைக்கு செல்பவர்கள் எந்த பாதிப்பும் அடையவில்லை, நமது நிறுவனங்கள் சிறப்பாக இயங்கின, நமது நிதி நிலைமை திடமாக இருந்தது மேலும் நாட்டின் பொருளாதாரம் ஏற்றத்தில் ஆரோக்கியமாகவே இருந்தது. இன்று காரோனோவை எதிர்த்து போர் புரிகின்ற இந்த தருணத்தில? உண்மை என்ன ? நமது நாட்டில் இது எதுவுமே சாதகமாக இல்லை.
இருந்தபோதிலும், இதற்கு சரியான தீர்வு, முறையான முன்னுரிமைகள் இந்தியாவின் மூல பலங்ளைக் கொண்டு இந்த கொரோனா கொள்ளை நோயை அதனால் ஏற்பட்ட பொருளாதார சீரழிவை விரட்டலாம். அதற்குண்டான தளத்தை அமைத்து செயல்பட்டால் நாட்டின் எதிர்காலம் சிறப்பாகும்.
பேட்டி முதல் கமெண்டில்.
ஊதம் சங்கை ஊதியாச்சு, விடிவது எப்போது?

https://economictimes.indiatimes.com/news/economy/policy/ready-to-help-india-in-dealing-with-economic-stress-caused-by-covid-if-asked-says-raghuram-rajan/articleshow/75091867.cms?fbclid=IwAR2OvpSc87nG5g1Q56MlfQOIT6ul3wlW2vJOCwG8XqZUPTIJP1lwX8P8xsU

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக