சனி, 25 ஏப்ரல், 2020

மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாப்பு வளையத்துக்குள் .. கிரிமி நாசினி தெளிப்பு .. தெருக்கள் சீல் வைக்கப்பட்டது


Shyamsundar  --  /tamil.oneindia.com| மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் பட்டரின் குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், தற்போது மதுரை மீனாட்சி அம்மன்
கோவில் மொத்தமும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் பட்டரின் குடும்பத்தில் உள்ள பெண் ஒருவருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. பட்டரின் தாயாருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இது மதுரையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பட்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளிநாடு சென்று வந்துள்ளார். இதன் மூலம் அந்த பட்டரின் தாயாருக்கு கொரோனா பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதனால் தற்போது மொத்தமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கோவிலை சுற்றி 2 கிமீ பகுதிக்கு மொத்தமாக லாக் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கோவில் மொத்தமும் தற்போது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. கோவில் மொத்தமும், கோவிலுக்கு வெளியே இருக்கும் பக்தியும் சுத்தம் செய்யப்பட்டது வருகிறது.

கோவிலில் தற்காலிகமாக பூஜை நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட முதியவர் இருக்கும் அந்த வீட்டில் மேலும் 7 பூசாரிகள் உள்ளனர். அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதா என்று சோதனை செய்யப்பட்டு வருகிறது. மொத்தமாக அவர்கள் வீடு சீல் செய்யப்பட்டுள்ளது. வீட்டில் இருக்கும் எல்லோரும் கொரோனா முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்
மேலும் அந்த குடும்பத்திற்கு அருகில் வசிக்கும் மற்ற எல்லா குடும்பங்களும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வீடு வீடாக சோதனை நடக்கிறது. யாருக்காவது கொரோனா அறிகுறி உள்ளதா என்று சோதனை செய்கிறார்கள். காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளதா என்று சோதனை செய்யப்பட்டு வருகிறது.
யார் எல்லாம் சென்று வந்தனர் இந்த நிலையில் அந்த கோவிலுக்கு கடந்த ஒன்றரை மாதத்தில் சென்று வந்தவர்கள் எல்லாம் யார் என்று விசாரிக்கப்பட்டு வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வந்த யாருக்காவது அறிகுறிகள் இருக்கிறதா என்று சோதனை செய்யப்பட்டு வருகிறது. லாக் டவுனுக்கு பின் கோவில் பணிகளை செய்ய கோவிலுக்குள் சென்றவர்கள் எல்லோரையும் தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தினமும் பூஜை செய்தனர் தினமும் பூஜை செய்தனர் லாக் டவுனுக்கு பிறகு தினமும் பூஜை மட்டும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்து இருக்கிறது. இதனால் அந்த பூஜையில் கலந்து கொண்ட பூசாரிகள் யார் எல்லாம் என்று வி
னை அதேபோல் அந்த கோவிலில் பணியாற்றிய போலீசார் 60 பேருக்கு கொரோனா சோதனை செய்ய சாம்பிள் எடுக்கப்பட்டு உள்ளது. இவர்கள் அந்த கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கோவிலில் இருக்கும் வேறு சில பணியாளர்கள், அறநிலையத்துறை பணியாளர்கள் ஆகியோருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக