ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

திணறும் சென்னை.. கொரோனா நோயாளிகளை குணப்படுத்துவதில் பெரும் பின்னடைவு.. என்னதான் ஆச்சு தலைநகருக்கு?


tamil.oneindia.com/  :   சென்னை: கொரோனா நோயாளிகளை குணப்படுத்துவதில் தமிழகத்தில் சென்னைதான் மிகவும் மோசமாக பின் தங்கி உள்ளது. Tap To UNMUTE காற்றில் பறந்த சமூக இடைவெளி... அத்தியாவசிய பொருட்கள் வாங்க திரண்ட மக்கள் தமிழகத்தில் சென்னைதான் கொரோனா காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 72 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,755 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 452 ஆக உயர்ந்துள்ளது.r /> சென்னையில் மொத்தம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 130 பேர் குணமடைந்து உள்ளனர். 310 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 11 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் 50%க்கும் அதிகமான நபர்கள் கொரோனாவில் இருந்து குணப்படுத்தப்பட்டு உள்ளனர். ஈரோடு, கரூர், திருச்சி, கோவையில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களில் 80% பேர் வரை குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆனால் சென்னையில் மற்ற மாவட்டங்களை விட குறைவான எண்ணிக்கையில்தான் மக்கள் குணப்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா தாக்கியவர்களில் வெறும் 33% பேர் மட்டுமே
குணப்படுத்தப்பட்டுள்ளனர். இதுதான் தமிழகத்திலேயே மிகவும் குறைவான குணப்படுத்தப்படும் வீதம் ஆகும். தமிழகத்தில் கோவைதான் சதவிகித அடிப்படையில் அதிகமான நபர்களை (171 பேர்) குணப்படுத்தி உள்ளது. ஈரோடு நிலை ஈரோடு நிலை கோவைக்கு அடுத்து ஈரோட்டில் 64 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். அங்கு இன்னும் 4 நோயாளிகள் மட்டுமே மீதம் இருக்கிறார்கள. அதேபோல் கரூரிலும் கொரோனாவில் இருந்து 90% பேர் மீண்டும் இருக்கிறார்கள். ஆனால் சென்னையில் இன்னும் 310 பேர் மீதம் இருக்கிறார்கள். தமிழகத்தில் ஆக்ட்டிவ் கேஸ்கள் அதிகம் இருப்பது சென்னையில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இறப்பு விகிதம் அதேபோல் தமிழகத்தில் சென்னையில்தான் அதிகமான நபர்கள் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா காரணமாக பலியான நபர்களில் 50% பேர் சென்னையை சேர்ந்தவர்கள். அதாவது 11 பேர் சென்னையில் மட்டும் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். மொத்த தமிழக பலி எண்ணிக்கை 22 தான். பாதிக்கு பாதி. சென்னையில் உலகதரமான மருத்துவமனைகள் இருந்தும், தமிழகத்தின் மருத்துவ தலைநகர் என்று சென்னை அழைக்கப்பட்டும் கூட இதுதான் தற்போது சென்னையின் நிலை.

 கொரோனா பாதிப்பு குறித்து சென்னையில் மண்டல வாரியான விவரங்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் திருவொற்றியூர் பகுதியில் 13 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வளசரவாக்கம் பகுதியில் 13 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அடையாறு 10 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தேனாம்பேட்டையில் 53 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தண்டையார்ப்பேட்டையில் 59 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். முழு விவரம் முழு விவரம் திருவிக நகரில் 55 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பெருங்குடியில் 8 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கோடம்பாக்கத்தில் 52 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அண்ணாநகரில் 39 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாதவரத்தில் 3 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.சோழிங்கநல்லூரில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆலந்தூரில் 9 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அம்பத்தூர், மணலியில் தலா ஒன்று. ராயபுரத்தில் 133 பேருக்கும் பரவி உள்ளது.



குணமடைந்தோர் விவரம் திருவொற்றியூர் பகுதியில் பேருக்கு 4 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர் . வளசரவாக்கம் பகுதியில் 4 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.அடையாறு 4 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.திருவிக நகரில் 25 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.பெருங்குடியில் 4 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். கோடம்பாக்கத்தில் 17 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். அண்ணாநகரில் 15 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.  மாதவரத்தில் 3 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

சோழிங்கநல்லூரில் 2 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். ஆலந்தூரில் 2 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். அம்பத்தூர், மணலியில் யாரும் குணப்படுத்தப்படவில்லை. ராயபுரத்தில் 28 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். தேனாம்பேட்டையில் 8 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். தண்டையார்ப்பேட்டையில் 14 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது Read more at: https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-very-less-number-of-patients-recovered-in-chennai/articlecontent-pf452375-383643.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக