புதன், 29 ஏப்ரல், 2020

இந்தி நடிகர் இர்பான் கான் காலமானார்





 NDTV  New Delhi:
பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை சிகிச்சைப்பலனின்றி மரணமடைந்தார்.
53 வயதான நடிகர் இர்பான் கான், 2018-ல் தான் புற்றுநோயால் (நியூரோஎண்டோகிரைன் டியூமர்) பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இதற்காக லண்டனில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் (குடல் தொற்று) பாதிக்கப்பட்டதால் இர்பான் கான், மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து, உடல்நிலை மோசமாக உள்ளதால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைபலனின்றி மரணமடைந்தார்.
1988 முதல் ஹிந்திப் படங்களில் நடித்து வந்தார். 2017-ல் இவர் நடித்து வெளியான 'ஹிந்தி மீடியம்' படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் சீனாவிலும் பெரிய வெற்றி பெற்றது. 2011-ல் 'பான் சிங் தோமர்' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.

மறைந்த இர்பான் கானுக்கு மனைவி சுதாபா சிக்தர், மகன்கள் பாபில், அயன் உள்ளனர். நடிகர் இர்பான் கான் தாயார் சயீதா பேகம் கடந்த வாரம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இர்பான் கான் மறைவுக்கு சினிமா ரசிகர்களும், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இன்று காலை, இர்பானின் உடல்நலம் குறித்து ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், இர்பானின் செய்தித்தொடர்பாளர் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
அதில், "இர்பானின் ஆரோக்கியம் குறித்து அதிதீவிரமான கற்பனைகள் செய்யப்படுகின்றன என்பதை அறிவது ஏமாற்றமளிக்கிறது. அவர் மீது கவலை கொண்டவர்களை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் ஒரு சிலர் மோசமான புரளிகளைப் பரப்பி பதட்டத்தை ஏற்படுத்துவது வேதனையாக இருக்கிறது.
இர்பான் வலிமையான மனிதர். அவர் இன்னமும் (நோயுடன்) போராடிக் கொண்டிருக்கிறார். தயவு செய்து புரளிகளை நம்ப வேண்டாம் என்றும், கற்பனையான உரையாடல்களில் கலந்துகொள்ள வேண்டாம் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம். அவரது ஆரோக்கியம் குறித்த செய்திகளைத் தெளிவாகப் பகிர்ந்து வருகிறோம். அது தொடரும்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட சூழலில் அவரின் இறப்பு செய்தி வந்துள்ளது.
சமயம் .காம் : பாலிவுட் நடிகர் இர்பான் கான் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பட்டிருந்தார். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது திடீர் மறைவு சினிமா நட்சத்திரங்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இர்பான் கான் மறைவுக்கு பிரபலங்கள் பலர் ட்விட்டரில் அதிர்ச்சியும் இரங்களும் தெரிவித்து வருகின்றனர்.>
நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இர்பான் கான் இறந்துவிட்டதாக செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. இது மிகவும் சோகமான மற்றும் மிகவும் அதிர்ச்சி தந்துள்ள செய்தி. ஒரு சிறந்த திறமைசாலி, ஒரு அன்பான சக நடிகர், சினிமா உலகத்திற்கு நிறைவான தனது பங்களிப்பை தந்தவர். ஒரு வெற்றிடத்தை உருவாக்கிவிட்டு இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு சென்றுவிட்டார்" என கூறியுள்ளார்.
நடிகர் மாதவன் ட்விட்டரில் இர்பான் கான் பற்றி பேசியுள்ளார் "இது மிகுவும் சோகமான ஒன்று. RIP இர்பான் சார். ஒரு அபூர்வமான கலைஞர் மற்றும் மனிதரை சினிமா துறை இழந்துவிட்டது" என கூறியுள்ளார்.

நடிகை ஹுமா குரேஷி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "உங்களின் திறமைக்காக உங்களை எப்போதும் அனைவரும் நினைவில் வைத்திருப்பார்கள். தனித்துவமான நடிகர் இர்பான் கான். உங்களுடன் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நீங்கள் உச்சத்தில் இருக்கும்போது இப்படி கொண்டுசெல்லப்பட்டிருப்பது சோகமாக இருக்கிறது. உங்கள் குடும்பத்து என் இரங்கல்கள்" என கூறியுள்ளார்.


நடிகை நயன்தாரா பதிவிட்டுள்ள ட்விட்டில் "இர்பான் கான் இறந்துவிட்டதாக செய்து கேட்டு அதிர்ச்சி ஆனேன். ஒரு சிறந்த நடிகர். சீக்கிரம் சென்றுவிட்டார். RIP" என குறிப்பிட்டுளளார்.


மற்ற முன்னணி சினிமா நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ள ட்விட்களின் தொகுப்பு இதோ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக