சனி, 25 ஏப்ரல், 2020

நடிகர் சிவகுமாரின் தஞ்சை கோயிலின் தீண்டாமை .. திருப்பதியின் ஊழல் ..முழு விபரம் வீடியோ


கோயில்களில் இன்னும் தீண்டாமை இருக்கிறது .ஏழை பணக்காரன் பாகுபாடு இருக்கிறது
கிபி ஆயிரத்தில தஞ்சவூர் கோயில கட்டினாங்க .. இப்ப ஆயிரமாவது ஆண்டு கொண்டாடினாங்க . அந்த கோயிலை ஆயிரக்கணக்கான் சிற்பிகளும் ஆயிரக்கணக்கான கொத்தனர்களும் சித்தாட்களும் வேலை பார்த்திருப்பாங்க அந்த கோயில ஆறு வருஷம் கட்டியிருக்காங்க  . அப்புறம் கட்டி முடிச்சு பிரதட்ஷை பண்ணியிருக்காங்க   கும்பாபிசேகம் செய்து முடிஞ்சால் ..
அந்த மேல ஏறிய சிற்பி கொத்தனார் சித்தாள் ஒருவரும் அந்த சிவலிங்கத்தை தொட முடியாது ...
அந்த சித்தாட்களும் கொத்தானரும் கோயிலுக்குள்ளே போயி சாமி கும்பிட முடியாது   இதை நான் தவறாக சொல்வதாக நினைக்காதீங்க
நான் செம்மொழி மாநாட்டில் பேசுகின்ற பொழுது அந்த சிவலிங்கத்தை செய்த  சிற்பிகளின் பன்னிரண்டாவது தலைமுறையை சேர்ந்த சிற்பியே எனக்கு சொன்னது... அய்யா இன்னும் அதே நிலைமைதான் . எங்க பன்னிரண்டாவது தலைமுறையை சேர்ந்தவங்கதான் அந்த சிலையை செய்தாங்க .நாங்க இன்னும் கோயிலுக்குள்ளே போக அனுமதி இல்லை என்றார்கள்.
யோசனை பண்ணுங்க யோசனை பண்ணுங்க  . இன்னும் அந்த கோயிலில தீண்டாமை இருக்கிறது .

திருப்பதி .உலகத்திலயே பெரிய சாமி .. கோடிகளை கொட்ட கூடிய சாமி ..
காட்பாடில இறங்கினான் ஒரு பக்தன் .. நாற்பது நாள் விரதமிருந்துட்டு வெறும் பச்சை தண்ணியை குடிச்சிட்டு .போறான்  நடந்து போறான் ..
இவன் மேல போனா பாம்பு சுத்து சுத்தியிருக்கிற மாதிரி எட்டு சுத்து சுத்தி இருக்கிறது வரிசை . இதில நின்னு ..கேரேசன் அடுப்பில சப்பாத்தி சுட்டு தின்னுபிட்டு .. நாலாவது நாள்தான் சாமியை பார்க்க முடிச்சது  . உள்ள போனான் இந்த ஏழை பக்தன் ..  அங்கே மூங்கில் குச்சியை வச்சுக்கிட்டு ஜரிகண்டி ஜரிகண்டின்னு அடிச்சு அனுப்புறாங்க .
ஆனால் ஒரு கோடீஸ்வரன்  பொண்டாட்டிக்கு தெரியாம ஒரு கொஞ்சும் குமரியை கூட்டிட்டு போயி கெஸ்ட் ஹவுஸ்ல ராத்த்ரி பூரா குடிச்சு புட்டு காலைல நாலு மணிக்கு குளிக்காமல் கோயிலுக்கு போனா தலையில் கும்பம் வைத்து மரியாதை செய்கிறார்கள் .
நான் கண்ணுல பார்த்ததை சொல்றன் .. சும்மா ஒண்ணும் புருடா ஒண்ணும் விடமாட்டேன் ... இங்கே சிவகுமார் பேசியவற்றில் சில குறிப்பிட்ட செய்திகளை மட்டுமே எழுதி உள்ளேன் .. முழுவதும் பாருங்கள் . நன்றாக உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக