வியாழன், 16 ஏப்ரல், 2020

எம்ஜியார் ஆட்சிப் பற்றி அன்றைய இந்தியா டுடே எழுதிய விமர்சனம் ,,, சுருக்கமாக.

Muralidharan Pb : பத்து ஆண்டு எம்ஜியார் ஆட்சிப் பற்றி அன்றைய இந்தியா டுடே எழுதிய விமர்சனம் உங்களுக்காக சுருக்கமாக.
ஒருகாலத்தில் மிகப் பெரிய ஆதர்ச நாயகனாகக் கொண்டாடப்பட்ட எம்ஜியார்  இந்த பத்து ஆண்டுகளில்
தனி மனித துதிப்பாடல் அரசாங்கத்தை மட்டுமே நடத்தி மக்களை முட்டாளாக்கினார்.
இந்த பத்து ஆண்டுகளில் தமிழகம் பெரிதாக கொண்டாடிட எதுவுமே இல்லை. மூவேந்தர்கள் ஆண்ட இந்த மாநிலத்தில் நான் அனைத்தையுமே காக்க வந்த படைப்பு என்று வீர வசனம் பேசிவிட்டு, கட்சி தொடங்கி, ஆட்சி அமைத்த ராமசந்திரன், இந்த பத்து வருடங்களில் ஒரு அறிவிழந்த சர்வாதிகாரத்தையே கொடுத்தார். சர்வாதிகாரியாக மட்டுமே அல்லாமல் வந்த பாதையை மறந்து, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதவர்.
அவரை அவதூறு பேசும் ஊடக விமர்சகர்களும்,  எம்ஜியாரின்  அற்பமான நலத்திட்டங்களை பெரியதாக பேசினார்கள். அதுவே மக்களை ஓட்டாண்டியாக்கும் திட்டங்கள் என்று பேசமறுத்தனர்.
அதனாலேயே அவர் மக்களின் செல்வாக்கை இழக்காமல் இருந்தார்.
அவர் எதை நலத்திட்டமென்று சொன்னாரோ, அது மக்களை பேரழிவிற்கு கொண்டு போகும் குறையுள்ள திட்டங்களே,அதுவும் பொருளாதாரத்தையும், நிர்வாகத்தையும் சீரழிக்கும் நோய் தடுப்பு திட்டங்களே அவர் ஆட்சியில் நிறைந்திருந்தது.

எந்த ஊழலை எதிர்த்து ஆட்சி அமைக்கிறேன் என்று கூறி ஆட்சி ஏறினாரோ, அதே ஊழலை மிகவும் நேர்த்தியாக நிறுவனமயமாக்கப்பட்டது இந்த 10 ஆண்டுகளில் தான்.

எம்ஜியாரின்  மந்தமான பொருளாதார செயல்பாட்டினால் தமிழகம் அன்றைய தேசிய சராசரியை விட குறைந்து 3.5% க்கும் கீழே சென்றது.
இவரது ஆட்சியில் தனி நபர் வருமானம் மிகவும் குறைந்து அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க மக்கள் அவதிப்பட்டனர்.
அதிமுக ஆட்சியில் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களின் வாழ்வில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த பத்து வருடங்களில் குடிநீர், மின்சாரம் போன்றவைகளில் எந்த முன்னேற்றமும் காணவில்லை.
எம்ஜிஆர் என்ற தனி மனிதர் துதி பாடுதல் மற்றும் நடுநாயமான நிர்வாகமே மேலோங்கி இருந்தது.
ஊடகம் மற்றும் திரைத்துறையின் குரல்வளையை  பிடிக்கும் சட்டம் இந்த ஆட்சியில் நிறைய இருந்தது.
நிர்வாகமும் நீதித்துறையும் எந்நேரமும் பதற்றமான சூழலிலே இருந்துவந்தது.
சோர்வுற்ற அதிகாரத்துவமே எங்குமே காணப்பட்டது.
இந்தி எதிர்ப்பை அழுத்தி,  திராவிட கலாச்சாரத்தை பின்னுக்கு தள்ளியது இந்த ஆட்சியே.
சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெறும் அசைவற்ற நிறுவனங்களாய் வலம் வந்தார்கள்.
அன்று பத்து வருடங்களுக்கு முதல்வர் எம்ஜியார்  கோட்டைக்கு வராமல் இருந்தால் பெரிய செய்தி, பத்து ஆண்டுகளுக்கு பிறகு சட்டசபைக்கு முதல்வர் வந்தாலே பெரிய செய்தி.
80 களின் ஆரம்பத்தில் யாருமே முதல்வரை சந்தித்து பேசிட முடியும், இப்போது அவரைச் சுற்றி ஒரு பாதுகாப்பு என்ற சுவர் எழுப்பப்பட்டு, அவரை நேரடியாக பார்க்க முடியாத சூழல் உருவாகிப்போனது.
ஒவ்வொரு அமைச்சருமே ஏதாவது ஒரு ஊழல் புகாரில் தழைத்து ஓங்கினார். இவ்வளவு ஏன் முதல்வரே பல்வேறு ஊழல் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கின்றார் என்றால் அது மிகையாகாது.
சென்ற ஆண்டு அமைச்சர் ராஜாராம் ஹனோவர் தொழிற்கண்காட்சியில் பங்கு கொண்டு நிறைய காற்றலை மின் உபகரணங்கள் வாங்கி, கடற்கரை கிராமங்களின் மின் தேவைக்கு வாங்கி மின் பற்றாக்குறையை போக்கிட ஆவணங்களை முதல்வர் பார்வைக்கு வைத்து அந்த சிறிது கூட நகராமல் தேங்கியே கிடந்தது.
சென்னைக்கு கொண்டு வரவேண்டிய கிருஷ்ணா நதி நீர் முதல்வரின் பொறுப்பற்ற அணுகுமுறையால் கிடப்பில் போடப்பட்டது.
அனைத்துமே எம்ஜிஆர் என்றொரு தனிமனிதனின் கடைக்கண் பார்வைக்கே காத்து கிடந்தது. எந்த ஆட்சிமன்ற அலுவலரும் முதல்வரின் அனுமதியின்றி சென்னையை தாண்டி செல்லக்கூடாது என்று வாய்மொழி உத்தரவு போடப்பட்டிருந்தது.
முதல்வரிடத்திலே திடீரென்று 50 கோப்புகள் ஒரே நாளில் கையெழுத்தாகும், பிறகு பல மாதங்கள்
தேங்கியே இருக்கும்.
புது டில்லியில் பல மாநாட்டிற்கு இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் முதல்வரின் அனுமதி கிடைக்காத காரணத்தால் கலந்து கொள்ளாமல் இருந்தனர்.
இருபதிற்கும் மேற்பட்ட இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் இந்த பத்து வருடங்களில் தங்களது பதவியை விலகி காணாமல் சென்றனர்.
மாநில வருவாயை எம்ஜியார்  அரசு சத்துணவு, பல்பொடி, பாடப்புத்தகம், குறைந்த கட்டணம் மின்சாரம் என்று ஒதுக்கி மாநில கருவூலத்தை ஓட்டாண்டியாக ஆக்கி வைத்திருந்தார்.
மேற்கூறிய இலவசங்களுக்கு செய்த செலவுகளால் கட்டுமான பணிகள் தேங்கி கிடந்தது
.2 லட்சத்திற்கு மேல் சத்துணவு பணியாளர்களாக நியமித்து மற்ற வேலை வாய்ப்புகளை புறந்தள்ளியது மாநில நிர்வாகம்.
பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் கட்டிக்காத்த திராவிட கொள்கைகளை அதன் பேரை வைத்தே நிர்மூலம் ஆக்கினார் திராவிட தலைவர் எம்ஜியார் .
மாநில நிர்வாகம் மதத்தின் கோரப்பிடியில் சிக்கியது. அமைச்சர் ராகவனந்தம் எம்ஜியார்  நலம் பெற மொட்டை அடித்து தனது விசுவாசத்தை காட்டினார்.

கோயில்களுக்கு எம்ஜியார்  அரசு சார்பில் பொன்னால் ஆன தேர் இலவசமாக கொடுக்கப்பட்டது.
மொத்தத்தில் எம்ஜிஆர் என்கிற ரக்ஷகன் தனது செல்வாக்கை பயன்படுத்தி நாட்டை நாசமாக்கிய ராக்ஷ்சனானார் என்றால் அதில் துளியும் பொய்யே இல்லை.
இன்றும் தமிழகம் இருக்கும் இந்த நிலைக்கு வித்து 1977ல் எம்ஜியாரால்  போடப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக