வியாழன், 16 ஏப்ரல், 2020

நிவாரணம் வழங்க அரசு அனுமதி தேவையில்லை .. திமுக வழக்கில் தீர்ப்பு

நிவாரண உதவிகள் வழங்க அனுமதி பெற தேவையில்லை- திமுக வழக்கில் ஐகோர்ட் தீர்ப்புமாலைமலர் : ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அதிகாரிகளிடம் அனுமதி பெறத் தேவையில்லை என சென்னை ஐகோர்ட் கூறி உள்ளது சென்னை: ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் அமைப்புகள் சார்பில் உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை நேரடியாக வழங்க அரசு தடை விதித்தது. சமூக விலகலை பின்பற்றாமல் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுவதால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஏழை, எளியோருக்கு திமுக சார்பில் வழங்கப்படும் நிவாரணத்தை உள்நோக்கத்துடன் தடுத்துள்ள அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தனது மனுவில் தெரிவித்திருந்தது. இதேபோன்று மதிமுக, காங்கிரஸ் தரப்பிலும் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
உணவுகளை வாங்க மக்கள் கூடுவதால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. சமூக விலகலை கடைபிடித்தும், மக்கள் கூட்டம் சேராதவாறும் உதவிகள் வழங்கப்படுவதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டதுடன் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தனர்.


அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சேவை மனப்பான்மையுடன் உதவ வேண்டும் என்றால் அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். நிவாரணம் வழங்கும் நபர்களில் ஒருவருக்கு தொற்று இருந்தால்கூட மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். கண்ணுக்கு தெரியாத எதிரியிடம் அரசு போரிட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

பின்னர் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், நிவாரணப் பொருட்கள் வழங்குவது தொடர்பாக அதிகாரிகளிடம் அனுமதி  பெறத் தேவையில்லை என்றும், தகவல் தெரிவித்தால் மட்டும் போதும் என்றும் தெரிவித்தனர்.

48 மணி நேரத்திற்கு முன்பாக தகவல் தெரிவித்துவிட்டு நிவாரணப் பொருட்களை வழங்கலாம் என்றும், நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு 3 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறின

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக