செவ்வாய், 7 ஏப்ரல், 2020

அமெரிக்காவில் பணமிருந்தால் மட்டுமே சிகிச்சை .. அமெரிக்க இந்திய பெண்ணின் அழுகுரல்


வளன்பிச்சைவளன் : · இதுதான் வல்லரசு அமெரிக்கா! பணமிருந்தால் மட்டுமே சிகிச்சை!
 பொதுறையின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்தும் கொரோனாவைரஸ் ! ஏன் தனியார் மயத்தை எதிர்கிறோம்? மிகப் பெரிய வல்லரசு நாடு அமெரிக்கா. அதன் அதிபர் டிரம்ப் இனி அமெரிக்காவை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்கிறார். சுமார் 2,50 000 மக்கள் இறக்கக் கூடும் என்று அச்சம் தெரிவிக்கின்றார்
ஏன் இந்த நிலை? அங்கு மருத்துவம் தனியார் மயம். பணம் செலுத்தாவிடில் மருத்துவம் கிடையாது காப்பீடு தேவை சமான்யர்களிடம் காப்பீடு கிடையாது எனவே அவர்களால் மருத்துவ மனை சிகிச்சையை எண்ணிப் பார்க்க முடியாது. எனவே தொற்று பாதித்தவர்கள் வீட்டில் இருக்க வேண்டிய கட்டாயம் அவர்கள் தொற்றுடன் திரிந்து மரணிக்கிறார்கள் இதுவே சாமான்ய அமெரிக்கர்களின் பரிதாப நிலை.
மனித குலத்திற்கு எதிரான கொரோனா வைரஸை உலகே எதிர்த்து போராடி வரும் வேளையிலும். அமெரிக்க தனியார் மருத்துவ மனைகள் பணம் இருந்தால் மட்டுமே வாருங்கள் என அறிவிக்கின்றன. மனித உயிர்கள் மீது அக்கறை அற்ற பண வெறி லாப நோக்கை மட்டும் குறிக் கோளாக கொண்ட குரூர மனம் படைத்த கார்பரேட் முதலைகள். மனித குல எதிரிகள்.

இம் பணவெறி முதலைகளின் குரூர மனத்தின் இதன் எதிரொலியே இன்று எண்ணிக்கையில் அடங்காத தொற்று கண்டறியப் படாத கொரோனா நோயளிகளின் எண்ணிக்கையும் மரணமும்.

இன்று கொரோனா நமக்கு கற்பிக்கும் பாடம் இது தான். சில அத்தியாவசிய துறைகளை யாவது தனியார் மயமாக ஒப்படைக்கக் கூடாது என்பதே.
பொதுத் துறையின் பலனை இன்று அனுபவிக் கிறோம் இங்கு நோய் அறிகுறி என்றாலும், பாதிக்கப் பட்டாலும் அரசின் பொதுமருத்துவ மனைகளில் 24 மணி நேர சிகிச்சை பெற்ற இங்கு உள்ள ஒவ்வொரு குடிமனுக்கும் உத்தரவாதம் வழங்கப் பட்டு உள்ளது. இதை பேணி பாதுகாக்க வேண்டியதின் அவசியத்தை கொரோனா சுட்டுகிறது.
வல்லரசு அமெரிக்க குடிமகன் மருத்துவ மனை செல்ல வழியின்றி மரணிக் கிறான் ஆனால் இந்தியா வில் ஒவ்வொரு குடிமகனுக்கும் சிகிச்சை உண்டு.
அமெரிக்க வாழ் இக் கேரள பெண்மணி கண்ணீருடன் வேண்டுவது "கண்ணின் மணி போல் பொதுத்துறை யை பாதுகாக்க வேண்டும் என்பதே நான் அமெரிக்காவில் கற்ற பாடம்".இதை நெஞ்சில் ஏற்றுவோம்.
பாஜக மோடி அரசு அனைத்து பொதுத்துறை யை யும் தனியார் மயமாக்க விற்று வருகிறது. தனியார் மயத்தின் ஆபத்தை உணர்வோம். அதை இனியாகிலும் ஒன்று பட்டு தடுப்போம்.
நாடும், நாமும் நலம் பெற பொதுத்துறை களை பேணிக் காப்போம் தனியார் மயத்தை அனுமதியோம் என உறுதி ஏற்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக