திங்கள், 6 ஏப்ரல், 2020

70 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா வைரஸ் உயிரிழப்பு...

70 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு... என்று தணியும் இந்த கொரோனா தாக்கம்? மாலைமலர் : மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள்</ ஜெனிவா: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 208 நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்திவருகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா தாக்கம் எப்போது தணியும் என்று கணிக்க முடியாத நிலை உள்ளது. இன்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் 12 லட்சத்து 73 ஆயிரத்து 709 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 69 ஆயிரத்து 456 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 486 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.  

வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் 9 லட்சத்து 41 ஆயிரத்து 767 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 45 ஆயிரத்து 592 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. 

உலக அளவில் இத்தாலியில் அதிக அளவாக 15,887 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அதனைத் தொடர்ந்து ஸ்பெயின் அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளது. அங்கு 12,641 பேர் இறந்துள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இத்தாலியை அதிகம் உள்ளது. இத்தாலியில் கொரோனாவால் இதுவரை 128,948 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஸ்பெயினில் 131,646 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக