ஞாயிறு, 22 மார்ச், 2020

திரௌபதியை வாங்க தொலைக்காகள் தயாரில்லை

 மாலைமலர் :  திரையரங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'திரெளபதி'
படத்தின் தொலைக்காட்சி உரிமையை எந்தவொரு நிறுவனமும் வாங்கவில்லை!
இயக்குநர் மோகன்.ஜி இயக்கத்தில் ரிச்சர்ட், ஷீலா நடிப்பில் வெளியான படம் 'திரெளபதி'. மனோஜ் நாராயண் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்துக்கு ஜுபின் இசையமைத்திருந்தார். கூட்டு நிதி முயற்சியில் இயக்குநர் மோகன்.ஜியே தயாரித்திருந்தார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் உருவாக்கிய சர்ச்சையால், பெரும் எதிர்பார்ப்பு உருவானது.
1 கோடி ரூபாய்க்கும் குறைவான பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 14 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இதனால் இந்தப் படத்தில் முதலீடு செய்த அனைவருக்குமே 3 மடங்கு லாபம் கிடைத்தது.

இன்று (மார்ச் 20) இந்தப் படம் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதிலும் ஆதரவு தரும்படி இயக்குநர் மோகன்ஜி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதனிடையே, ”தொலைக்காட்சி உரிமை எந்த சேனல் ப்ரோ” என்று இயக்குநரிடம் ஒருவர் ட்விட்டர் தளத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு மோகன்ஜி "யாருக்கும் வாங்க விருப்பமில்லையாம்" என்று பதிலளித்துள்ளார். இதன் மூலம் இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமையை யாருமே வாங்க முன்வரவில்லை என்பது தெளிவாகியுள்ளது. மேலும் பெரும் லாபம் ஈட்டிய ஒரு படம், தொலைக்காட்சி உரிமம் விற்பனையாகாமல் இருக்கும் முதல் படமாகவும் 'திரெளபதி' அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
யாருக்கும் வாங்க விருப்பமில்லையாம் <

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக