திங்கள், 9 மார்ச், 2020

தமிழக பாஜக தலைவராகிறார் ஜி.கே.வாசன்... திமுக எம்.பி செந்தில் குமார் ட்வீட் ..

Dr.Senthilkumar.S @DrSenthil_MDRD GKவாசன்க்கு பிஜேபி பரிந்துரையில் ராஜ்ய சபா சீட் விரைவில் பிஜேபியில் இணைய இருக்கிறார். எனது புரிதலில் தமிழக தலைவராக வாசன் நியமிக்கப்படவுள்ளார் அப்போ இவ்வளவு நாட்கள் தொண்டை கிழிய கத்துன ஓயாமல் பலன் எதிர்பார்த்து ஆதரவு குடுத்த எங்க தமிழக பாஜக தலைவர்கள் கதி என்ன கொடுமை Sir இது
நக்கீரன் :மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. தமிழகத்தில் காலியாகும் ஆறு
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மார்ச் 26- ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான  கே.பி.முனுசாமி, முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனை அதிமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதல்வர் பழனிசாமி,  துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை சந்தித்து மாநிலங்களவை சீட் வழங்க தேமுதிகவின் எல்.கே.சுதீஷ் கோரியிருந்த நிலையில், அதிமுக தலைமை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனுக்கு சீட் வழங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனுக்கு அதிமுக தலைமை ராஜ்யசபா சீட் கொடுத்தது குறித்து தருமபுரி திமுக எம்.பி. டாக்டர்.செந்தில் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "GKவாசன்க்கு பிஜேபி பரிந்துரையில் ராஜ்ய சபா சீட். விரைவில் பிஜேபியில் இணைய இருக்கிறார். எனது புரிதலில் தமிழக தலைவராக வாசன் நியமிக்கப்படவுள்ளார். அப்போ இவ்வளவு நாட்கள் தொண்டை கிழிய கத்துன ஓயாமல் பலன் எதிர்பார்த்து ஆதரவு குடுத்த எங்க தமிழக பாஜக தலைவர்கள் கதி. என்ன கொடுமை Sir இது😉" என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக