செவ்வாய், 24 மார்ச், 2020

திருடப்படும் ஆற்று மணல் வருமானம் யார், யாருக்கு? .. காவிரி காப்பாளருக்கே !

Venkat Ramanujam : எடப்பாடியின் பி.ஏ.க்களில் ஒருவரான சேகருக்கு
சட்டமன்றத்தில் பேசிய எடப்பாடி, தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்கு 80%பேர் எம் சாண்ட்டைத்தான் பயன்படுத்துகிறார்கள் என்றும், மணல் திருடர்கள் கைது செய்யப்படுகிறார்கள் என்றும் கூறியிருக்கிறாரே ..
வெரி இண்டரஸ்டிங் .. அப்படியானால் ., எடப்பாடியின் பி.ஏ.க்களில் ஒருவரான சேகருக்கு வேண்டிய பெரிய டீமே மணல் அள்ளிக் கொண்டு இருப்பதாக கட்டுமான தொழிலில் ஈடுபட்ட அனைவரும் சொல்வது உண்மையா இல்லையா ..
திருவள்ளூரில் இருந்து கடலூர் வரை, ஒரு லோடு ரூபாய் 45 ஆயிரம் வீதம் விற்கப்படுகிறதா இல்லையா ..
அதிமுக முதல்வர் எடப்பாடி ஆட்சியில், டெல்டா மாவட்ட ஆறுகளை ஒட்டிய பகுதிகளில் மணலை எடுத்து ஒரு டிராக்டர் டிப்பர் மண் 6 ஆயிரம் ரூபாய் என்று விற்கப்படுகிறதா இல்லையா ...

 எம்.சாண்ட் பயன்படுத்துகிற மாநிலத்தில் இந்த ஆற்று மணல் கோரானா பாதித்த இந்த நாள் வரை அள்ளப்படுகிறதா இல்லையா ..
இப்படி திருடப்பட்ட ஆற்று மணம் வருமானம் யார், யாருக்கு போகிறது என்பதை படிப்பவர்களுக்கு சொல்லி தான் தெரிய வேண்டுமா .. கைதாக வேண்டிய மணல் திருடர்கள் பலரும் கோட்டையில் உள்ள அதிமுக மற்றும் பாஜக கட்சியினரிடம் பாதுகாப்பாக இருக்கிறார்களா இல்லையா ..
இதிலே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவித்த காவிரி காப்பாளர் பட்டம் வேற வாங்கிட்டு பாரு அங்கொன்னு திரியுது பாரு #தண்டவகோனே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக