சனி, 28 மார்ச், 2020

ஆயுதம் வாங்க நாம் போடும் பட்ஜெட் நம் உயிரை காக்க போவதில்லை!

Devi Somasundaram : பாதுகாப்பு என்பது அவசியமான ஒன்று தான்.ஆனால்
எதிரிகளிடம் இருந்து காக்க நாட்டில் மனிதர்கள் இருக்கனும். வெறும் நிலத்தை காத்து கொள்கிற நிலைக்கு நாம் ஆளாகிவிடக் கூடாது என்பதை இயற்கை நமக்கு உணர்த்தி செல்கிறது .
ஒரு பகுத்தறிவாளரா கொரானா ஏன் வந்தது என்பதை பரிணாம வளர்ச்சியில் இருந்தே ஏற்க முடியும் ..அவ்வகையில் அடுத்த காலங்களில் இது போன்ற கிருமிகள் உருவாகலாம் .. அப்படி கண்ணுக்கு தெரியாத எதிரியிடம் இருந்து நம்மை காக்க நாம் என்ன முக்கியத்துவம் தந்தோம் என்பதை கொரானா முகத்தில் அடித்து உணர்த்துகிறது .
ஆயுதம் வாங்க நாம் போடும் பட்ஜெட் நம் உயிரை காக்க போவதில்லை என்பதை அறிகிறோம்..நம் டாங்குகள், பீரங்கிகள், ஏவுகணைகள், போர் கருவிகள் எதுவும் தற்பொழுது நம்மை காக்கப் போவதில்லை .
வருமா, வராதா என்று தெரியாத war ,க்கு நாம் தந்த முக்கியத்துவத்தை நம் சுகாதார கட்டமைப்புக்கு தர தவறியதன் பலனை உலகம் இன்று அனுபவிக்கின்றது .

வல்லரசு நாடு, உலகின் வலிமையான நாடு என்று கூறப்படும் அமெரிக்காவில் போதிய மருத்து உபகரணங்கள் இல்லை என்பதை அங்குள்ள் மருத்துவர்கள் தொடர்ந்து பதிய வைப்பது அமெரிக்க ராணுவ மய கருத்தாக்கத்தை ஆட்டி பார்த்துள்ளது .( லிங்க் பின்னூட்டத்தில் ) .
இனியாவது நாடுகள் தேச பாதுகாப்பை மக்கள் பாதுகாப்பில் இருந்து தொடங்கினால் நலம்..
ராணுவ பலத்தை பெருக்க காட்டும் ஆர்வத்தை சுகாதார கட்டமைப்பை இன்னும் நூறாண்டுக்கு முன்கூட்டியே திட்ட மிட்டு வளர்க்க நாடுகள் தங்கள் பட்ஜெட்டை வடிவமைத்தால் நலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக