திங்கள், 30 மார்ச், 2020

நியூயார்க்கில் 52,000 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு ... லாக்டவுன் கிடையாது .. பங்கு மார்கெட் சரியுமோ?


தினத்தந்தி :அமெரிக்காவை மிரட்டும் கொரோனா தொற்று; நியூயார்க நகரை சீனா உகான் நகரைப்போல் தனிமை படுத்த டிரம்ப் அதிரடி திட்டத்தில் இருந்து பின்வாங்கினார்.
நியூயார்க்  அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துவிட்ட நிலையில், இதில் நியூயார்க்கில் மட்டும் 52,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றின் மையமாக நியூயார்க் இருப்பதால், வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அந்நகரத்தை தனிமைப்படுத்துவது குறித்து சிந்திப்பதாக அமெரிக்க ஜனாதிபதிடொனால் டிரம்ப் கூறி உள்ளார். ஆனால், அதிபர் டிரம்பின் இந்த யோசனையை நியூயார்க் ஆளுநர் கடுமையாக விமர்சித்தார். இது ''விபரீதமானது'', ''அமெரிக்காவிற்கு எதிரானது'', ''போர் அறிவிப்பு போன்றது'' என்று நியூயார்க் ஆளுநர் ஆன்ட்ரு தெரிவித்தார்.


நியூயார்க்கில் ஏற்கனவே மக்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், மக்கள் அதிகமாக பொது இடங்களில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் ஆளுநர் கூறியுள்ளார். எனவே அந்நகரை முழுமையாக முடக்குவதற்கு ஆளுநர் ஆண்ட்ரு எதிர்ப்பு தெரிவித்தார்.
"நியூயார்க்கிற்கு முழுமையாக தடை விதித்தால், சீனாவின் வுஹான் போல நாம் ஆகிவிடுவோம், இதனால் எந்த பலனும் இல்லை" என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க் பகுதிக்கு பயண எச்சரிக்கையை வெளியிடுவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்  தெரிவித்தார், பிராந்தியத்தை முழுவதுமாக துண்டிக்க முயற்சிக்கலாம் என்ற முந்தைய ஆலோசனையிலிருந்து பின்வாங்கினார். 

"நியூயார்க்கை தனிமைப்படுத்த தேவையில்லை," என்று அவர் டுவிட்டரில் கூறி உள்

1 கருத்து: