திங்கள், 30 மார்ச், 2020

இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் 24 கோடி பேருக்கு கொரோனா?

Muralidharan Pb : · ஒரு செய்தியை கண்டேன் புதிய தலைமுறை தொலைக்காட்சியில். அதிர்ந்து போனேன். இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் 24 கோடி பேருக்கு கொரோனா தோற்று ஏற்படும் என்ற திடுக்கிடும் தகவல் தான் அந்த அதிர்ச்சி. அது வெறும் அச்சுறுத்தலாக இருக்க வேண்டும். இது நடக்கக்கூடாது. நடக்கவேண்டாம் என்று தான் இந்தியர்கள் அனைவரும் வேண்டுவோம். நடக்கப்போதில்லை என்று நம்மால் அறதியிட்டு கூறமுடியாததை உணர்த்தியது தலைநகரில் நடந்த நிகழ்வுகள். அரசு சரியாக முயற்சி மேற்கொள்ளவில்லையா நிச்சயமாக ஒன்றிய, மாநில அரசுகள் முயற்சியில் எந்தவித விமர்சனமும் இல்லை. ஆனால் நடக்க வேண்டிய அடுத்தடுத்த நடவடிக்கைகள் அச்சமூட்டும்படியாக இருக்கின்றது.
லாக் டௌன் சரிதானே?
நிச்சயமாக. லாக் டௌன் நல்ல தீர்வு. முற்றிலும் சரி. ஊரடங்கினால் மட்டுமே தான் மாற்று மருந்து இல்லாத நிலையில் நோய் பரவாமல் தடுக்க முடியும்.
மருத்துவப் பணிகளில் குறையிருக்கா?
என் சாமான்யா அறிவுக்கு எட்டியவரை ஒன்றிய மாநில அரசுகள் சிறப்பாகவே செயலாற்றுகிறது.இந்த விஷயத்தில் மட்டும்.
அன்றாடப் பொருட்கள் கிடைக்கிறதா?
கிடைப்பதில் சிக்கல் இருக்கா?
கிடைக்கிறது. அதிலும் எந்த சிக்கலும் இல்லை.
என்னதான் பிரச்சனை? எங்கே சறுக்கப்போகிறோம் என்று நாம் கருதுவது?
ஓன்றிய அரசு, வழக்கம் போல அவசர கோலத்தில் அள்ளி தெளித்ததாக தோன்றுகிறது. தொலைக்காட்சியில் தோன்றி அறிவிக்கும் முன்பு எல்லாமே சரியாக இருக்கிறதா என்று இன்னும் கூட தீர்க்கமாக சிந்தித்து செயல் பட்டிருக்கலாமோ எனத் தோன்றுகிறது.

அரசு, எந்த மக்களுக்காக இவ்வளவு மெனக்கடுகிறதோ அதை எடுத்தேன் கவிழ்த்தேன் என அறிவித்தது நமக்கு பழைய வரலாறுகளை நினைவூட்டுகிறது. பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அறிவிப்பைப் போல அதே சறுக்கல். ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளாமல், அரசு இயந்திரத்துக்கு நேரமே கொடுக்காமல், போனதால் இங்கு வரப்போகும் அபாயங்களுக்கு யார் பொறுப்பேற்பது?
மாத இறுதியில் ரேடியோவில் வந்து தயார் படுத்திப் பேசிவிட்டுப் போவதைப் போல பேசிவிட்டால் எல்லாம் தீர்ந்துவிடுமா?
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட அறிவிப்புகள் தவறாக போனதால் பெரிய இழப்பு ரொக்கப் பணம். அந்த அதிர்ச்சியில் சிலர் உயிரிழந்திருக்கலாம். அது தவிர்க்க முடியாதது என்று கூட வேறு வழியின்றி ஏற்கலாம்.
ஆனால் கொரோனா பற்றிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவிக்கும் போது தவறான கணிப்பு மற்றும் முறையாக திட்டமடாதது பெரிய ஆபத்தை அளிக்கவல்லது என்று உணராமல் செய்தது தான் எல்லா குழப்பங்களுக்கும் காரணி. ஏனெனில் இங்கு அதிகபட்ச இழப்பு மனித வளம்.
அரசின் அறிவிப்பை நாட்டு மக்கள் காது கொடுத்து கேட்காததற்கு இரண்டு காரணம்
1. நீங்கள், எளியவன் புரியா வண்ணம் அறிவித்தது.
2. அரசியல்வாதிகளை ஏழை இந்தியன் நம்பவில்லை.
தனித்தனியாக அலசுவோம்.
ரயில்களை, விமானங்களை, மாநிலத்துக்கிடையேயான தரைவழி போக்குவரத்தை ரத்து செய்துவிட்டு ஊரடங்கு உத்தரவு போட்டதில் ஆரம்பித்தது குழப்பம்.
கையில் காசுக்கு விளிம்பு நிலை இந்தியன் நாள்தோறும் உழைத்தால் மட்டும் வருவாய். அவனுக்கு வேலைக்கு போகும் கதவுகளை மூடிவிட்டால் நகரத்தில் காசில்லாமல் வாழ்வது எங்கனம்? ஊரடங்கு என மூன்று நாட்களுக்கு முன்னர் நேரம் கொடுத்து அறிவித்திருந்தார் என்றால் பாதி பேர் தங்கள் வழியை தானே தேடி ஊருக்கு போயிர்ப்பார்கள். இவ்வளவு குழப்பம் இருந்திருக்காது.
2. அரசியல்வாதிகளை நம்பாமல் போனதற்கு மேற்கூறியதே காரணம். அரவிந்த் கேஜரிவாலும், யோகியாதினாத் கூறினாலும் ஏழை இந்தியனுக்கு வசதிகளை செய்யாமல் 'இங்கேயே தங்கு, எங்களை நம்பு நம்பு' என்றால் எப்படி நம்புவான். இதுவரை இந்த மாதிரியான காலகட்டத்தில் நம்பிக்கை தரும் விதமாக எதாவது நடத்தினாரா கேஜரிவால்? உதாரணமாக அண்மை வன்முறைபிரதமரும் முதல்வரும் இருவருமே
கொரோனா பற்றிய முன்னெச்சரிக்கை எல்லாமே முறையே, இந்திய மருத்துவக் கழகமும் தமிழக மருத்துவக் கழகமும் கூறும் ஆலோசனைகளை செயல்படுத்துகிறவர்கள் இதுதான் உண்மை.
இதை நாட்டில் மக்களிடம் பேசவேண்டிய உள்துறை அமைச்சரின் செயல்பாடுகளையும் அறிவிப்புகள் எதையுமே காண முடியவில்லை.
அதற்கு பதிலாக ஒரு கட்டத்தில் ராணுவ அமைச்சர் பேட்டி கொடுக்கிறார்.
சுற்றுச்சூழல் அமைச்சர் வீட்டில் உட்கார்ந்து ராமயணம் பார்க்கிறேன் என ட்வீட் போடுகிறார். பழைய சீரியலை ப்ரமோட் செய்வதற்கா ஒரு அமைச்சருக்கு அழகு?
ஒன்றியத்தின் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் ஒரு மருத்துவர். அவரது செயல்பாடுகளை காணவே முடியவில்லை. 21 நாட்கள் ஓய்வெடுக்கிறார் போல மருத்துவர். நாட்டில் இருக்கும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து பணி செய்யும் போது, இவரை காணவே முடியவில்லை. நல்லதொரு துறை அமைச்சர்.
சரியோ தவறோ தமிழகத்தில் நடப்பதை முதல்வரும் சுகாதாரத்துறை அமைச்சரும் பேட்டி கொடுக்கிறார், களத்தில் பார்க்கிறோம்.
போருக்கு தயார் ஆகுங்கள் என பிரதமர் சொல்லிவிட்டு அடுத்தடுத்து வந்து தோன்றிப் பேசியது மொத்தமும் Negative Mindset.
இதில் யாருக்கும் அய்யமிருத்தால் பிரதமரின் கொரோனா சம்மந்தமாக வந்த மூன்று காணொளிகளையும் பார்த்தவர்களுக்கு புரியும். அச்சத்தை போக்க வேண்டியவருக்கே அச்சம் எனத் தோன்றும்.
அந்த கொரோனாவே பிழைத்துக் கொள் இந்தியாவே என நம்ம நாட்டை விட்டு போனால் தான் நாம் பேரிழப்பை தவிர்க்க முடியும்.
ஓபனிங் நல்லாவே ஆடிட்டு மிடில் ஆர்டரில் சொதப்பும் அணியைப் போல இருக்கு இந்த ஏற்பாடுகள்.
-அச்சத்தோடு ஒரு இந்தியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக