சனி, 8 பிப்ரவரி, 2020

சில்லுக்கருப்பட்டி .. A Wonderful Feel Good Movie

Bilal Aliyar : அரைவட்டமாக கரிய நிறத்தில் இருக்கும் கருப்பட்டியின்
சுவையை நாம் உணர முடியாது .. அதே நேரத்தில் அதை சில்லு சில்லாக சிறிய பாகங்களாக உடைத்து சில்லுக்கருப்பட்டியாக்கி வாயில் போட்டால் அதன் சுவையை நீண்ட நேரம் உணர முடியும் ... அதைப்போல தமிழ் சினிமாவில் பல குறும் படங்களை ஒன்றிணைத்து, தித்திப்பான ஒரு உணர்வை, ஹைக்கூ கவிதைகளாக மாற்றி சில்லுக்கருப்பட்டியாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஹலீதா சமீம் ...
சின்ன சின்ன காட்சியமைப்புகள், வீரியமான எளிய வசனங்களை போகிற போக்கில் பேசுவதன் மூலம் நடைமுறை வாழ்வின் சிக்கல்களை, எதார்த்த நிலையை வெகு இயல்பாக பேசுகிறது இந்த படைப்பு... நாடகத்தன்மையுடன் உணர வைக்கும் சில காட்சியமைப்புகளை தாண்டி உறவுகளுக்குள் நிகழும் உணர்வு பூர்வமான எதிர்பார்ப்புகளை அவரவர் பார்வையில் நிறுத்தி பேச வைக்கிறது இந்த படம்....
சமீபகால தமிழ் சினிமாவில் 25 வயது நிரம்பிய நாயகிக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாக கதைக்களம் அமைக்கப்பட்டதும், முதிர்பருவ உணர்வுகளை நுணுக்கமாக காட்சிப்படுத்தியதும், காதல், திருமண உறவு, சமூக அடுக்குகளில் பெரிய இடைவெளியுடன் கூடிய ஏற்றத்தாழ்வுகள் குறித்து பேசுவதும் மிகுந்த கவனிப்பை பெறுகிறது..
A Wonderful Feel Good Movie

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக