சனி, 8 பிப்ரவரி, 2020

ரஞ்ஜீத் பச்சன் (40) '' விஸ்வ ஹிந்து மகா சபா '' தலைவரை ஆள் வைத்து சுட்டுகொன்ற இரண்டாவது மனைவி .


Mohamed Rafi : உத்தரபிரதேசம் லக்னோவை சேர்ந்த ரஞ்ஜீத் பச்சன் (40) '' விஸ்வ ஹிந்து மகா சபா '' என்ற அமைப்பின் தலைவர். சென்ற
ஞாயிற்றுக்கிழமை வாக்கிங் சென்ற போது இவரை அடையாளம் தெரியாத நபர் மண்டையில் சுட்டுக்கொன்று விட்டார்.
வழக்கம் போல முஸ்லிம்கள் மீது பழி சுமத்தப்பட்டது. இவருக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வந்ததாகவும், இஸ்லாமிய தீவிரவாதிகள் தான் செய்திருப்பார்கள் என்றும் இவர் மனைவி களிந்தி சர்மா தெரிவித்தார்.
ரூ. 50 லட்சம் பணம், வீடு , இவர் மனைவிக்கு அரசு வேலை வழங்கும்படி சங்கீகள் கோரிக்கை வைத்தார்கள்.
இந்தநிலையில் போலீஸ் விசாரணையில், செத்துப்போன ரஞ்சித் பச்சனின் இரண்டாவது மனைவி ஸ்மிருதி ஸ்ரீவத்சவா தன் கணவரை விவகாரத்து செய்துவிட்டு தேவேந்திரா என்பவரை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். விவகாரத்துக் கேட்டு 2016ல் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது. விவகாரத்து வழங்க ரஞ்சித் பச்சன் மறுத்து வந்துள்ளார்.

செத்துப்போன ரஞ்சித் பச்சன் சென்ற வாரம் தன் இரண்டாவது மனைவியை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்மிருதி ஸ்ரீவத்சவா தன் கள்ளக்காதலன் தேவேந்திரா உதவியுடன், மும்பையை சேர்ந்த ஜிதேந்தர் என்ற கூலிப்படை கொலையாளி மூலம் தன் கணவனை சுட்டுக்கொன்றது தெரிய வந்தது.
சங்கிகளுக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் இருப்பதும், பல காரணங்களால் கணவனை விவகாரத்து செய்ய பெண்கள் விரும்பினாலும், ஆண்டுக்கணக்கில் வழக்கு நீதிமன்றத்தில் இழுத்தடிக்கப்படுவதும் தெரிகிறது. ஷரியா சட்டப்படி *குலா* என்ற முறையில் கணவனை உடனடியாக விவகாரத்துச் செய்யும் உரிமை இந்துப் பெண்களுக்கும் கிடைத்திருந்தால் இந்த சங்கி இந்நேரம் உயிரோடு இருந்திருக்கலாம்.
தன்னோட மருமகளையே ரேப் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த போதுதான் ரஞ்சித் பச்சன் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதுதான் இந்த கொலையில் முக்கிய ட்விஸ்ட்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக