செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

வெளிவந்த Sanam -Tharshan-ன் ரகசிய Engagement வீடியோ

.polimernews.com : திருமணம் செய்து கொள்வதாக நிச்சயதார்த்தம் செய்து வாழ்க்கையையே கெடுத்து விட்டதாக, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் தர்சன் மீது அவரது காதலி சனம் செட்டி காவல் ஆணையர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். அமைதிப்படை அமாவாசையாக மாறி போன தர்சனின் காதல் லீலைகள் குறித்து விவரிக்கின்றது

பிக்பாஸ்.... பிரபலம் இல்லாதவர்களை பிரபலமாக்குவதற்காக நடத்தப்படும் 100 நாள் வேலை வாய்ப்பு நிகழ்ச்சியான இதில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் இளம் நடிகர் தர்சன்..!
மூன், கதம் கதம், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளவர் நடிகை சனம் ஷெட்டி..!
சினிமாவில் நடிப்பதற்கு முன்பு, மாடலாக இருந்த போதே நடிகை சனம் செட்டியை காதல் வலையில் வீழ்த்தியவர் தர்சன். இவர் சிறு சிறு விளம்பரங்களுக்கு மாடலாக இருந்து வந்த நிலையில் நடிகை சனம் ஷெட்டி பணம் உதவி செய்து அவரது வளர்ச்சிக்கு பின்புலமாக இருந்து வந்ததாக கூறப்படுகின்றது.

இதனால் இருவருக்குள்ளும் காதல் தீ பற்றிக் கொள்ள 3 வருட காதலுக்கு மரியாதை செய்யும் விதமாக ஒரு வருடத்திற்கு முன்பு சனம் ஷெட்டியை திருமணம் செய்வதாக நிச்சயம் செய்து கொண்டார் தர்சன்..!
சனம் செட்டியுடன் கமிட்டான நிலையில் சிங்கிள் என பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்த தர்சன், ரொம்ப நல்லவனாக காட்டிக் கொண்டு இளம் ரசிகைகளை கவர்ந்தார், அங்கேயும் தனது காதல் லீலைகளை தொடங்கிய தர்சன் துள்ளுவதோ இளமை ஷெரீனை ஆட்டம் பாட்டம் என சுற்றி வந்து காதல் வலையில் வீழ்த்தினார்
பிக்பாஸ் ரசிகைகள் எல்லாம் தர்சனை லவ்வர்பாயாக பார்க்க தொடங்கிய நிலையில் அவரது வளர்ச்சிக்கு பின்னால் இருந்த சனம் செட்டி, தான் தர்சனை ஏற்கனவே முன்பதிவு செய்து காத்திருப்பதாக மெல்ல வாய்திறந்தார்.
பிக்பாஸ் டைட்டில் பட்டத்தை தவறவிட்டாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியால் பிரபலமான தர்சன் லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றதால், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த பின்னர் சனம் செட்டியை சந்திக்காமல் தவிர்க்க தொடங்கியதோடு, நடிகை ஷெரீன் உடன் நெருக்கம் காட்டியதாக கூறப்படுகின்றது.
அடுத்த சில மாதங்களிலேயே விளம்பரம் படங்கள் மட்டுமல்லாமல் திரைபட வாய்ப்புகளும் தர்சனுக்கு கிடைத்ததால், ஒரு கட்டத்தில் அமைதிப்படை அமாவாசை போல சனம் செட்டியை கழட்டிவிட்டதாக கூறப்படுகின்றது.
சனம் ஷெட்டி நடிக்கும் படங்களின் நாயகர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வதாக தர்சன் சுமத்திய குற்றச்சாட்டுத்தான், இவர்களுக்கிடையேயான காதல் முறிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது
ஆனால் தர்சன் பிக்பாஸ் நெருக்கத்தால் ஷெரீனுடன் காதல் கொண்டார் இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஜோடியாக சுற்றி திரிந்தனர். தர்சனுக்கு பெண்கள் பழக்கம் அதிகரித்ததால் ஒரு கட்டத்தில் ஷெரீனும் கழட்டி விட்டதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் மன்மதனாக வலம் வரும் தர்சனின் காதல் வலையில் புதிதாக மலேசிய பெண் ஒருவர் சிக்கி இருப்பதாக கூறப்படுகின்றது. இருவரிடையே நெருக்கம் அதிகரித்து வந்த நிலையில் தான், தர்சன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் பகிரங்க மோசடி புகார் அளித்து தர்சனின் ஆட்டத்துக்கு செக் வைத்திருக்கிறார் சனம் ஷெட்டி என்கின்றனர் அவரது நண்பர்கள்
முழுசா ஒரு படம் வெளியாகல அதற்குள்ளாக எத்தனை காதல்? இத்தனை பிரேக் அப் ? என்று திரை உலகினர் வாய் பிளந்து நிற்க, தர்சன் உடனான காதல் முறிந்து 6 மாதங்கள் கழித்து நடிகை சனம் செட்டி திடீரென நம்பிக்கை மோசடி புகார் அளித்திருப்பதால் இந்த புகாரின் பின்னணியில் பல்வேறு சந்தேகங்களையும் கிளப்பி உள்ளது. போலீஸ் விசாரணையில் இந்த சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கும் என்கின்றனர் தர்சனின் நண்பர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக